tamilnadu

லதா மங்கேஷ்கருக்கு பேரவையில் இரங்கல்

சென்னை, மார்ச் 21- பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ் கர் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை யில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை திங்களன்று (மார்ச் 21) கூடியதும் மறைந்த முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஜானகி ராமன், என்.கருப்பண்ண உடையார், பெ.மாரப்பன், மு.மு.அ.ரசாக், வேழவேந் தன் ஆகிய 5 பேரின் மறைவுக்கு இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்  மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் 2 மணித்து ளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.