திருக்கோயில் வருவாய் திருட்டு தடுக்கப்படுமா?
நாகர்கோவில், ஜுலை 21- திருக்கோவிலில் உள்ள கட்டணச் சேவைகள் அனைத்தும் இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளவும் திருக்கோவில் கட்டணச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் வசதிகள் பெறுவதற்கு அறநிலையத்துறை இணையதளத் தில் (www.hrce.tn.gov.in) வழிவகை செய்யப் பட்டுள்ளது. இச்சேவையை கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அந்த வகையில் முதற்கட்டமாக அதிக பக்தர்கள் வருகை தரும் 550 முக்கிய திருக்கோயில்களில் அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், திருமண கட்டணம், பரிகாரக் கட்டணம், சனிபெயர்ச்சி கட்டணம் மற்றும் குருபெயர்ச்சி கட்டணம் உள்ளிட்ட 255 வகையான சேவைகள் இணையவழி மூலம் முன்பதிவாகவும், திருக்கோயில் கட்டண சீட்டு மையங்களில் கணினி வாயிலாக உடனடி ரசீதுகளாகவும் வழங்கப்படு கிறது. இவ்வாறு இணைய வழியாக திருக்கோயில் களில் கணினி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் விரைவு பரிசோதனைக்கான கியூ.ஆர். (QR) குறியீடும் உள்ளது. திருக்கோயில்களில் நடக்கும் முறைகேடு களை தடுக்க இணையம் மற்றும் கணினி வழி பதிவுகள் நடந்தாலும் முறைகேடுகள் குறைய வில்லை. அதிகரிக்கவே செய்துள்ளது. கணினிமய மாக்கப்பட்ட 550 திருக்கோயில்களில் கன்னியா குமரி மாவட்டம் வேளிமலை குமாரசுவாமி கோயிலும் ஒன்று. திருவாங்கூர் சமஸ்தானத்தில் இக்கோயில் பெரும் புகழ்பெற்றிருந்தது. தொடரும் பாரம்பரியத்தில் இப்போதும் தெற்கு கேரள மக்கள் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இந்த கோயிலிலுக்கு வருவாய் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு அச்சிட்ட ரசீதுகளை கொடுக்கும் பணியை கணக்கர் செய்து வந்துள்ளார். தற்போது கணினி வழி ரசீது வழங்கப்பட்டு வருகிறது. கணினி பதிவுகளுக்கும் பணம் வசூலுக்கும் ஆலய ஊழியர் அல்லாத வேறு நபர்கள் பயன்படுத்தப்படு கிறார்கள். ஊழியர் பற்றாக்குறையை காரணம் காட்டி இவர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகளை ஆலய நிர்வாகம் செய்வதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவனந்தபுரம் நேமத்தைச் சேர்ந்த மோகன் ராம் கடந்த 14.5.2022 அன்று குமாரகோவிலுக்கு வந்துள்ளார். அவருடன் வந்த குடும்பத்தினர் 7 நபர்களின் பெயர்களுடன் அவர்களது நட்சத்திரம் கையால் எழுதப்பட்ட அர்ச்கனைக்கான துண்டுச் சீட்டு கொடுத்துள்ளனர். அந்த சீட்டின் பின் பக்கத்தில் ஒரு நபருக்கான ரூ.5 மட்டும் கணினி பதிவாக உள்ளது. நபர் ஒன்றுக்கு ரூ.5 வீதம் 7 பேருக்காக ரூ.35 கொடுத்துள்ளார் மோகன்ராம். அப்படியென்றால் கோயில் கணக்கில் ரூ.5 மட்டுமே வரவாகி உள்ளது. மீதமுள்ள தொகை யாருக்கு சென்றிருக்கும்? இதற்கு முன்பு அச்சிட்ட அர்ச்சனை சீட்டுகள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் விநி யோகிக்கப்படுவது வழக்கம். தற்போது கணினி பதிவு சீட்டின் மூலம் பல்லாயிரம் ரூபாய் வருவாய் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அர்ச்சனை விவரத்தை ஆய்வு செய்தால் நடந்து வரும் முறைகேடுகளை எளிதில் கண்டறிந்துவிடலாம். தினமும் பல்லாயிரம் ரூபாய் கோயிலுக்கு வரு வாய் இழப்பு ஏற்படுவதை இதன்மூலம் தடுக்க வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
இதுபோல், திருமணம், துலாபாரம், சோறு ஊட்டுதல், பஞ்சாமிர்த அர்ச்சனை, காவடி கட்டு, அன்னதானம் போன்ற நிகழ்வுகளிலும் பெரும் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின் றனர். ஆலயங்களுக்கு வரவேண்டிய வருவாய் தனிநபர்களால் சூறையாடப்படும் நிலையில் தமிழக அரசு மானியமாக வழங்கும் தொகையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான அறநிலையத்துறை மானி யக் கோரிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்புச் செலவிற்காக தற்போது வழங்கப்பட்டுவரும் ஆண்டுக்கான அரசு மானி யம் ரூபாய் 3 கோடியிலிருந்து ரூபாய் 6 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூ.85 லட்சம் மதிப்பிலான திருப் பணிகள், குழித்துறை மகாதேவர் திருக்கோயி லுக்கு சொந்தமான பழைய அரண்மனை கட்டி டத்தில் இயங்கி வந்த பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.15 லட்சம், திக்குறிச்சி கோயில் சுற்றுச்சுவர், படித்துறை பராமரிப்புக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோயில் வருவாயை முறைப் படுத்தினால் மேலும் கூடுதல் வளர்ச்சிப்பணிகளை யும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த முடியும். இதை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கணினி பயன்பாடு குறித்து வெளியிட்ட ஏப்ரல் மாத அறிவிப்பில், சேவை கட்டணம் ரசீது பெறு வது தொடர்பாக குறைபாடுகள் இருப்பின் அதனை ஆணையர் அலுவலக உதவி மைய தொலை பேசி 04428339999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என வும் தெரிவித்திருந்தார். இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, பெயர் நட்சத்திரம் குறிப்பிட்டு அர்ச்சனை செய்ய ஒவ்வொரு கோயிலி லும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வேளிமலை குமாரகோ யில் கட்டண ரசீது முறைகேடு தொடர்பான புகார் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- சி.முருகேசன்