tamilnadu

img

சம்பளம்,போனஸ் வழங்கிடுக-பி.எப்.பணத்தை செலுத்திடுக! காஜா பீடிக் கம்பெனி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம்

தென்காசி/திருநெல்வேலி, அக்.11-  முறையாக சம்பளம் வழங்க வேண்டும். பி.எப்.பணத்தை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காஜா பீடிக் கம்பெனி தொழி லாளர்கள்  வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் மடத்தூரில் அமைந்துள்ளது காஜா  பீடி கம்பெனி. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வாரங் களுக்கு மேலாக தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லீவு சம்பளமும் வழங்கவில்லை. தீபாவளி போனசும் வழங்கவில்லை . தொழிலாளர்களின் பாஸ்புக்கில் வாரம் ஆறு நாள் வரவு  வைக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் நான்கு நாள் மட்டும் வரவு வைத்து விட்டு தனியாக டூப்ளிகேட் பாஸ்புக் போட்டு இரண்டு நாள் அந்த புக்கில் வரவு வைத்து தொழிலாளர்களையும் அரசையும் ஏமாற்றுகிற வேலையை செய்து வந்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் முறையாக சம்பளம் வழங்கக் கோரி யும் நிலுவை பாக்கிகளை உடனடி யாக வழங்க வலியுறுத்தியும் புதன்கிழ மையன்று வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டு, கம்பெனி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சிஐடியு மாவட்ட செயலாளர் மணிகண்டன், பீடி சங்க மாவட்டத் தலைவர் குருசாமி, மாவட்ட செயலாளர் மகாவிஷ்ணு, மாநி லக்குழு உறுப்பினர் கற்பகம், சிபிஎம் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் தங்கம் உள்ளிட்டோர் நேரில் வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக பங்கேற்றனர்.  நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. சங்கத் தலைவர்கள் நிர்வாகத்துடன் தொழி லாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிர்வாகம் இன்று (அக்டோபர் 12) சம்பளம் வழங்கு வதாக ஒப்புக்கொண்டது. லீவுச் சம்பளம், தீபாவளி போனஸ் பாக்கிகளை வழங்கவும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து தொழி லாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பணிக்குத் திரும்பினர்.

மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

காஜா பீடிக் கம்பெனி தொழிலா ளர்களுக்கு மாதத்தில் 15 ஆம் தேதி க்குள் சம்பளம் வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்த கூடாது. விடுமுறை கொடுக்க வேண்டும், 2 ஆண்டுகளாக பி.எப் பணத்தை நிர்வா கம் செலுத்தவில்லை.உடனே அதை செலுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி நெல்லை மேலப்பாளை யம் சந்தை முக்கில்  சிஐடியு பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு  சங்க கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே. மாரிச்செல்வம், மாவட்ட பொரு ளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை  விளக்கி பேசினர். ஒன்றிய செயலாளர் சூசை அருள் சேவி யர், மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கி ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட தலை வர் சரவண பெருமாள் நிறைவுரை யாற்றினார்.