மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் நினைவு தினம் புதுச்சேரி ரெட்டியார் பாளையம் மாநிலக் குழு அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் வி. பெருமாள், ராமச்சந்திரன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி,பிரேமதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.