tamilnadu

img

அள்ளிப் பருக நீளும் கைகள்...

மதுரை அவனியாபுரம் கவிஞர் அருணகிரியின் அர்த்தங்கள் பொதிந்த ஹைக்கூ கவிதைகள்தொகுப்பு ஞாயிறு அன்று, 
மதுரை உலக தமிழ் சங்கத்தில் ஜூன் 9 நடைபெற்ற 
உலக ஹைக்கூ கவிதையாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அழகு மிகு நூல்.
படிக்கப்படிக்க ஆவலைத்தூண்டுகிறது. ஓராயிரம் விளம்பல்களை தூண்டும்இந்தத் தொகுப்பு எண்பத்து மூன்று கவிதைகளையே உள்ளடக்கி இருந்தாலும், எண்ணற்ற கேள்வி
களை உள்ளடக்கிய கவிதைகள் ஏராளம்.
கவிஞர் அருணகிரியின் சொல்லாடல், மதுரை வழக்கு மொழிகளையும் தாண்டியதாய் இருக்கிறது. தமிழில் பேச வேண்டும் தமிழில் எழுத வேண்டும் என்கிற தோழ
ரின் தீராத தாகம் தனது மண்ணான மதுரையின் வட்டார வழக்கைச்சாராத விதமாக அத்துனைக் கவிதைகளும் ஆரவாரம் 
செய்கின்றன. படிப்போ ரின் எண்ணங்களில் எதை எதையோ சிந்திக்கத் தூண்டுகின்றன.
ஹைக்கூ கவிதை வடிவத்தைமிக மிக லாவக
மாக தனக்குள் சேகரம் செய்து வைத்திருக்கிறார் அருணகிரி. பாராட்டாமல் இருக்க முடிய
வில்லை. ஒவ்வொரு மூன்று வரி கவிதைகளும்,
எதையோ சொல்ல வருவது,  நமது விழித்திரை களுக்கு முன்னே விரிந்து பரவுகிறது.
கவிஞர் ஏகாதசி அவர்களின் அணிந்துரை கூடுதலாய் இந்த தொகுப்பை தூக்கி நிறுத்து
கிறது. எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் வாழ்த்துரை ஹைக்கூ அர்த்தாம்சங்களை வலு சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது.
வறண்ட நதியில்
குளிக்கும் அரசியல்வாதி
மணல் திருட்டு...

ஒரு புள்ளியில்
களவு போனது ஐந்தாண்டு
கள்வனின் கையில் தேசம்...

போக்குவரத்து விதியை மீறி 
வளைவில் முந்தியது
பட்டாம்பூச்சி...

சிதையும் பழைய கற்பிதம்
சிதையாமல்
கீழடி மண்பானை...

கூடு திரும்பவில்லை
காற்றில் அலையும்
உதிர்ந்த சிறகு...
இப்படியாக கவிஞர் அருணகிரியின் கவிதை தாகம் நீண்டு கொண்டே செல்கிறது அரசியல் சமூகம், மனிதாபிமானம், இயற்கை தழுவல்கள் என்று இந்த சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற சீர்கேடுகளை களையெடுக்கும் விதமாக தனது மூன்று வரிகளை பயன்படுத்தி இருக்கிறார் ஹைக்கூ என்று... நூலாக்கமும் வடிவமைக்கும் நேர்த்தியோ நேர்த்தி...பாராட்டலாம் தானே... வாழ்த்துவோம்.

- கவிஞர் முத்தையா மோகன்

அள்ளிப் பருக நீளும் கைகள்
(ஹைக்கூ கவிதைகள்)
ஆசிரியர் : அருணகிரி
வெளியிடு : நடுகை பதிப்பகம்,
107/309, முதன்மைச் சாலை,
அவனியாபுரம், மதுரை 625 012
விலை : ரூ.75/ பக்கம் : 64

 

 

;