புதுக்கோட்டை, மே 8- புதுக்கோட்டையை அடுத்த வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவத்தில் மரபணு சோதனைக்காக 10 பேரிடம் ரத்த மாதிரிகள் திங்கள்கிழமை சேகரிக்கப் பட்டன. புதுக்கோட்டை மாவட் டம் வேங்கைவயலில் தலித் குடியிருப்புக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த டிசம் பர் 26 அன்று தெரியவந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து எடுக்கப் பட்ட மனிதக்கழிவு, சென் னையிலுள்ள தடய அறி வியல் சோதனை மையத் துக்கு அனுப்பி வைக்கப் பட்டு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்த மனி தக்கழிவு யாருடையது என கண்டறியும் நோக்கில், மர பணு பரிசோதனை மேற் கொள்ள சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 11 பேருக்கு மரபணு பரி சோதனை மேற்கொள்ள சிபி சிஐடி காவல்துறையினர் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் ஏற்பாடு செய்தனர். இவர்களில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி களைக் கொடுத்துச் சென்ற னர். மற்றவர்கள் இதனை ஏற்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேலும் 10 பேரிடம் மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அவர்கள் திங்கள்கிழமை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வரவழைக்கப் பட்டனர். கடந்த முறை 11 பேரில் 3 பேர் மட்டுமே வந்த நிலையில், தற்போதைய சோதனைக்கு 10 பேரும் வந்து ரத்த மாதிரிகளைக் கொடுத்தனர். இந்த 10 பேரில் 7 பேர் இறையூரைச் சேர்ந்த வர்கள், 2 பேர் வேங்கைவய லைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேலமுத்துக்காட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பி டத்தக்கது.