tamilnadu

img

சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மதுரை மாநகர் புறநகர் விருதுநகர் மாவட்டங்களில் கண்டன முழக்கம்

மதுரை, மே. 14- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நல வாரியத்தில் நலவாரிய அட்டைகள் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறவில்லை. இதை ஆகஸ்ட் மாதம்வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். மத்திய அரசு 8 மணி நேர வேலையினை 12 மணி நேரமாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மதுரை மாநகர் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சி. சுப்பையா, இரா. லெனின், சாலையோர வியாபாரி கள், கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே. ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கொரோனா நோய் தொற்றில் சமூகப் பணியாற்றி வரும் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், காவல்துறை என்று சமூக பணியாற்றும் அனைவருக்கும் நன்றி முழக்கங்களை எழுப்பினர். அரசு ஊழியர்களின் பணி ஓய்வு காலம் 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்தியதை கண்டித்தும். 8மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்தும் அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் பி. எம். அழ கர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், சம்மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி. ராஜேந்திரன், ஆர். வாசுதேவன், மாவட்டச் செயலாளர்கள் முரளிதரன், மணிமாறன், மகாதேவன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர்
மதுரை புறநகரில் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகம், யா. ஒத்தக்கடை மற்றும் கட்சி அலுவலகம், கள்ளந்திரி, சமயநல்லூர், விளாங்குடி, விக்கிரமங்கலம், திருப்பரங்குன்றம், எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி, திருமங்கலம் மின்வாரிய அலுவலகம், மேலூர் சூப்பர் ரப்பர் நிறுவனம், ஏபிடி, எல்பிஜி கேஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சிஐடியு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்பட்டனர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் செ.ஆஞ்சி, சி.மணிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நல்.மூர்த்தி, ஏ.கஜேந்திரன்,ஆர்.மனோகர், துபாய்பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேட்பட்டி ஒன்றியச் செயலாளர் என். ஜெயபால், ஆட்டோ சங்க நிர்வாகி முனியசாமி, சசிகுமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், ஜி.கெளரி, மாவட்ட நிர்வாகிகள் பொன்கிருஷ்ணன், வி.பிச்சைராஜன், பொன்ராஜ், எஸ்.எம்.பாண்டி, இந்திரா, எம்.செளந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சொ.பாண்டியன், கிழக்கு தாலுகாச் செய லாளர் எம்.கலைச்செல்வன், தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்
விருதுநகரில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.சாராள், சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிவகாசி
சிவகாசியில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா தலைமை யேற்றார். சிபிஎம் நகர் செயலாளர் கே.முருகன், சிஐடியு தலைவர்கள் வி.என்.ஜோதிமணி, பி.பால்ராஜா, பி.பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற 10 பேரை சிவகாசி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழி லாளர்கள் பங்கேற்றனர்

திருவில்லிபுத்தூர் 
இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் மாரியம்மன் கோவில் லோடு வேன் சங்கம் உள்ளிட்ட ஆறு இடங்களில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் திருமலை, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜு னன், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், நகரச் செயலாளர் ஜெயக்குமார், சிஐடியு வீர சதானந்தம், கணேசன் உள்ளிட்ட பல்வேறு சிஐடியு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். வத்திராயிருப்பில் போக்குவரத்து தொழிற்சங்க தோழர் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மணிக்குமார், சிபிஎம் வத்ராப் நகரச் செயலாளர் பழனிச்சாமி பேசினர்.

 இராஜபாளையம் நகரில் சங்க அலுவலகம், ராம் சங்கர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிபிஎம் நகர செயலா ளர் மாரியப்பன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பி ரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஜவஹர் மைதானம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் இராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் செட்டியார்பட்டி, தள வாய்புரம், சேத்தூர் ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டியில் சங்கத் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சுமைப்பணி தொழி லாளர் சங்க நிர்வாகி வீரபாண்டி கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர்.

;