சிஐடியு ஸ்தாபகத் தலைவர் தோழர். இ. பாலனந்தன் நூற்றாண்டு நினைவு முன்னிட்டு “தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வும்” என்ற தலைப்பில் தொழிற்சங்க பயற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் தோழர் பா. பாலகிருஷ்ணன் பயிற்சி வகுப்பில் சிறப்புரையாற்றினார். அடுத்த கட்ட பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் அகஸ்டின் முன்மொழிந்தார். மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் நன்றி கூறினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, பெரியசாமி, செல்வி, பன்னீர்செல்வம் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் இன்பராஜ், கிருஷ்ணகுமார், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க நிர்வாகி வேணி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தினேஷ், பாலகிருஷ்ணன், ரங்கசாமி, கொசு புழு ஒழிப்பு பணியாளர் சங்கத்தினர் சேகர், சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தினர் லட்சுமணன், மாரியப்பன், வரதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.