பனாமா முடிவுக்கு சீனா வருத்தம்
சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ பொருளாதார உள் கட்டமைப்பு திட்டத்தில் இருந்து பனாமா விலகுவ தாக அறிவித்த முடிவுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் வருத்தம் தெரிவித்துள்ளார்.மேலும் இரு நாடுகளின் நீண்ட கால நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வெளி நாட்டு தலையீட்டை எதிர்க்க வேண்டும் என்றும் பனாமாவை அவர் வலியுறுத்தினார். டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பனாமாவை ஆக்கிரமிக்கப்போவதாக தெரிவித்து வருகிறார். இதனால் சீனாவுடனான பொருளாதார உறவை முறித்துக்கொள்ள அந்நாடு முடிவெடுத்துள்ளது.