tamilnadu

img

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட முதல்வர் அடிக்கல்

சென்னை, ஜூலை 26- புதுதில்லி, சாணக்யபுரி யில் உள்ள வைகை தமிழ் நாடு இல்ல வளாகத்தில் ரூ. 257 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்க ளுக்கு தமிழ்நாடு முதலமைச்  சர் மு.க. ஸ்டாலின் வெள்ளி யன்று (ஜூலை 26) தலை மைச் செயலகத்தில் இருந்து  காணொலிக்காட்சி வாயி லாக, அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 18.6.2021 அன்று புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பழைய கட்டி டங்களை முழுவதுமாக இடித்து  மறு மேம்பாட்டுப் பணிகளை  மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரிவான வடி வமைப்பு மற்றும் வரை படங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவல கங்களிலிருந்து உரிய ஒப்பு தல்கள் பெறப்பட்டன. புதி தாக கட்டப்படவுள்ள இக்  கட்டடம் மிக தீவிர நில அதி ர்வை தாங்கும் கட்டமைப் பாக வடிவமைக்கப்பட்டு, சென்னையில் உள்ள இந் திய தொழில்நுட்பக்கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட் டது. தமிழ்நாடு அரசின் பொதுத்  துறையால் புதுதில்லி தமிழ்  நாடு இல்லத்தை மறுசீர மைத்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 257 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்புதிய கட்டிடம் மிக  முக்கிய பிரமுகர் தொகுதி,  விருந்தினர் மாளிகை தொகுதி  மற்றும் அலுவலர்கள் குடி யிருப்புத் தொகுதி ஆகிய வற்றை உள்ளடக்கியது. இக் கட்டடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல்  தளங்களைக் கொண்டதாக வும், மொத்தம் 3 லட்சம் சதுர  அடி பரப்பளவில் கட்டப்பட் டுள்ளது.