tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சாவர்க்கருக்கு ஆளுநர் அஞ்சலி சென்னை:

பிரிட்டிஷ் மகாராணிக்கு 5 முறை மன்  னிப்புக் கடிதம் எழுதி, இனிமேல் சுதந்திரப் போராட்டத்  தில் பங்கெடுக்க மாட்டேன் என்று கூறி, அதன்படியே நடந்து கொண்டவர் வி.டி. சாவர்க்கர். அப்படிப்பட்ட நபரை, ‘அசாத்திய தேசபக்தர், அச்சமற்ற புரட்சி யாளர் மற்றும் ஆழ்ந்த தொலைநோக்கு சிந்தனை யாளர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் புண்ணிய திதி யில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்து கிறேன்’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரி வித்திருக்கிறார்.

மக்கள் விவரமானவர்கள் சென்னை:

நடிகர் விஜய் கட்சி தொடங்கி 2-ஆம்  ஆண்டை கொண்டாடிய நிலையில், விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனிடம் செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லா வற்றையும் ஓரம் கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள்  விவரமானவர்கள். இளம் தலைமுறையினரை அவ்வ ளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. உரிய முடிவு களை தேர்தல் உணர்த்தும் என்றார்.

எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பில் இந்தியா முழு வதும் விகிதாச்சார அடிப்படையில் எல்லா மாநிலங்களி லும் மக்களவை தொகுதிகள் உயருமென தெளிவு படுத்தியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா. 2024 இல்  இதை பிரதமர் மோடியும் உறுதி செய்தார். பின்னும்  முதல்வர் இப்படி சொல்வது ஏன்? தனக்கு இந்த தக வலை சொன்னது யார்? என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சொல்ல வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இந்தியா இன்னும் குழந்தைதான்

சென்னை: சாதி, மத அடிப்படையில் தேர்தலை சந்  திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள் ளது.  ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து  75 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் இந்தியா குழந்தை தான் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வசமாகச் சிக்கும் சீமான்

சென்னை: சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகார்  அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புதிதாக பல ஆதாரங்களை கொடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதன்மீது புதன்கிழமை (பிப்.26) காலை 10  மணிக்கு தொடங்கிய காவல்துறையினரின் விசாரணை  5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ஓசூர்: ஓசூர் அருகே பாகலுாரில், செம்மரக்கட்டை கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தக வல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நடத்திய சோதனை யில், வீட்டில் 715 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய்.