tamilnadu

img

நூலில் ஆடும் தோல்பாவைக் கூத்து! - கைகொடுக்குமா தமிழக அரசு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டு அருகே உள்ள காட்ரோட் டைச் சேர்ந்தவர் கலைமாமணி முத்து லட்சுமணராவ் (67). இவர் தோல் பாவை கூத்துக் கலைஞர். இவர், அழிந்து  வரும் கலைகளில் ஒன்றான தோல் பாவைக் கூத்துக் கலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிர் கொடுக்க  வேண்டுமென கோரிக்கை விடுத்துள் ளார். இது குறித்து அவர் அண்மையில் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:- மேடை யின் பின்புறம் அமர்ந்து பொம்மைகளை அசைத்து, நாடகம் போல வண்ணக் காட்சி களாய் திரையில் தெரியும் தோல் பாவை  கூத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெரியோ ரும் ரசிப்பார்.  கதை, வசனம், பாட்டு, திரைக்கதை தொடங்கி ஆண், பெண் குரல்கள், விலங்கு களின் ஒலிகளை எழுப்புவதோடு திரையின்  பின்னால் பொம்மைகளை கையால் இயக்குவது வரை ஒருவரே செய்வது இந்தக் கலையில் மட்டுமே சாத்தியம். தஞ்சாவூர் சரபோஜி மன்னர், மதுரை  திருமலை நாயக்கர் மன்னர் காலத்திலி ருந்து தலைமுறை தலைமுறையாக தோல்  பாவைக் கூத்து நடத்தி வருகிறோம். எங்க ளது தலைமுறை ஐந்தாவது தலைமுறை. எனது குடும்பத்தில் மொத்தம் 20 பேர்  உள்ளனர். இதில் நான்கு ஐந்து பேர்  மட்டுமே தோல்பாவைக் கூத்து நடத்து கிறோம். பெண்கள் பாத்திரம் வியாபாரம் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கலைக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்க  வில்லை. எங்களுக்கு வாழ்வளிக்க வேண்டியது கலை பண்பாட்டுத்துறையும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தான். தமிழ்நாடு அரசு பறையாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகள் மூலம் பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஆனால் தோல்பாவை கலைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்க வில்லை. கிராமப்புற சுகாதாரம், சுற்றுச் சூழல், வனவிலங்குகள் பாதுகாப்பு, அர சின் நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்பு ணர்வை கிராமங்களில் ஏற்படுத்த இக் கலையைப் பயன்படுத்தவேண்டும். நாங்கள் கையை வைத்து குட்டிக்கர்ணம்  அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மதுரை, விருதுநகர்,

தேனி, திண்டுக்  கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்  டங்களுக்கான கலைபண்பாட்டுத்துறை யின் தலைமையகம் மதுரை தான். இந்தப்  பகுதியில் இருப்பது நான் ஒரே ஒரு  கலைஞர் மட்டுமே. இந்த ஆறு மாவட்டங்க ளில் வாய்ப்பளித்தால் கூட போதுமானது. தமிழ்நாடு முழுவதும் 300 குடும்பங்கள் எங்களைப் போன்று உள்ளனர். எங்களது வாழ்வாதாரத்தையும் கலையையும் பாது காக்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தோல் பாவைக்காக செம்றியாடு, வெள்ளாட்டுத் தோல் வாங்கி பேப்பர் போல பதப்படுத்தி, அதில் உருவங்கள் வரைந்து வண்ணம் தீட்டுவோம். ராவ ணன், கும்பகர்ணன் போன்ற பெரிய படங்க ளுக்கு முழுத்தோலும் சரியாக இருக்கும்.  ராமர், லட்சுமணன் என்றால் இரண்டு படம்  வரையலாம். இந்த உருவ பொம்மை யுடன் மூங்கில் குச்சியை நுாலில் கட்டி விட்டால் தோல் பாவை தயாராகிவிடும். திருவள்ளுவர், அம்பேத்கர், புத்தர் என யாருடைய ஓவியங்களையும் நாங்கள்  தத்ரூபமாக தீட்டுவோம். ஒரு ஆட்டுத் தோலை பதப்படுத்தி அதில் ஓவியம் வரைய குறைந்தது ஒரு வாரம் ஆகும். தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்பவும் நாங்கள் தோல்பாவைக்கூத்து நடத்துவோம் என்றார். கடைசியாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் சுற்றுலாத்துறை நடத்திய கலைவிழாவில் நிகழ்ச்சியை நடத்தினார் முத்துலட்சுமணராவ். அவர், தற்போது வத்தலகுண்டு காட்  ரோட்டில் நாங்கள் புறம்போக்கு நிலத்தில்  வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா-வுடன் கூடிய இடம் வழங்கவேண்டும். மதுரையில் எங்களது கலைப்பொருட் களை பாதுகாக்க ஒரு அறை ஒதுக்கித் தர  வேண்டுமென்றார்.

;