tamilnadu

img

குடியரசுத் தலைவர் உரை அதானியின் தில்லுமுல்லு பற்றி எதுவும் இல்லை

புதுதில்லி, ஜன.31- நாடாளுமன்ற இரு  அவைகளின் கூட்டுக்  கூட்டத்தில் உரையாற் றிய குடியரசுத் தலை வரின் உரையில் அதானி யின் நிறுவனங்களின்  தில்லுமுல்லு குறித் தும் மற்றும் அரசின்  பல்வகை குறைபாடுகள் குறித்தும் எதுவும் கூறப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலை வர் பி.ஆர். நடராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வாயன்று தொடங்கியுள்ளது. நாடாளு மன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலை வர் உரை நிகழ்த்தினார். அவருடைய உரை யில் அரசு பல்வேறு துறைகளில் தோல்வி யடைந்தது பற்றிஎதுவும் குறிப்பிடப்பட வில்லை. இவை தொடர்பாக பி.ஆர். நட ராஜன் மக்களவைத் தலைவருக்கு ஒரு நோட்  டீஸ் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டி ருப்பதாவது:

1)    விலைவாசி உயர்வை, குறிப்பாக பெட் ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் அரசின் தோல்வி பற்றி குறிப்பிடப்படவில்லை.

2)    தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத் துறை பங்கு விலக்கல் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான வேலை  இழப்புகள், பெருகி வரும் வேலை யின்மை ஆகியவை பற்றி குறிப்பிடப் படவில்லை.

3)    ஆழமாகிக் கொண்டுவரும் இந்திய பொருளாதார மந்தநிலை பற்றி எதுவும்  குறிப்பிடப்படவில்லை.

4)     அதானியின் ‘பங்கு ஏமாற்றுதல்’ மற்  றும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும்  எல்ஐசி-யின் பங்குகளின் இழப்பு குறித்  தும் எந்த தகவலும் குறிப்பிடப்பட வில்லை.

5)    ஒவ்வொரு வேலை தேடும் நபருக்கும்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்  பயன்களை விரிவாக்குவதில் அரசின் தோல்வி குறித்து குறிப்பிடப்படவில்லை.

6)    மாநில அரசுகளின் அரசியலமைப்பு பங்கினை குறைத்து மதிப்பிடுதலுக்கும் மற்றும் கூட்டாட்சி போக்கிற்கு எதிராக அதனை அடித்து நொறுக்கவும், அதி காரத்தை மையப்படுத்தும் நாட்டத்திறு கம், ஒரு கருவியாக கூட்டாட்சி முறை யின் மீது வளர்ந்து வரும் தாக்குதல்கள் மற்றும் ஆளுநர் அலுவலக அதீத தலை யீடுகளை பயன்படுத்தி வருவதை பற்றிய எந்த விஷயங்களும் குறிப்பிடப்பட வில்லை.

7)    அனைத்து பயிர்களுக்கும் உத்தரவாதப் படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய எந்த தகவலும் குறிப்பி டப்படவில்லை.

8)    குஜராத்தின் மோர்பி நகரத்தில் உள்ள  பாலம் இடிந்து விழுந்த துயர சம்பவத் தில் பலியான 140 பேர் குறித்து எதுவும்  குறிப்பிடப்படவில்லை.

9)    மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதில் அரசின் தோல்வி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

10)    கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக வளர்ந்து வரும் தாக்குதல்கள் பற்றி எது வும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு பி.ஆர். நடராஜன் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.    

     (ந.நி.)

;