tamilnadu

img

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக பி.ராஜமாணிக்கம் நியமனம்

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக பி.ராஜமாணிக்கம் நியமனம்

ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ஏற்க னவே பொறுப்புத் தலைவ ராக இருந்து வருகிறார். நீதித்துறை சாராத உறுப் பினர்களாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான முனைவர் வி.ராமராஜ் மற்றும் வரு மான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறி ஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீமான் கட்சி நிர்வாகி விலகல்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமானின் பேச்சும் செயலும் முரண் பாடாக உள்ளது. பிழை யான தத்துவத்தை நோக்கி பயணம் செய்யும் சீமான், மனித குலத்தின் எதிரி பாஜக என சொல்லிவிட்டு, தற்போது அக்கட்சியின் தலைவர்களை புகழ்ந்து பேசுகிறார். சாதி பெருமை பேசுவோரை கண் டிக்காமல் சாதி வெறியை தூண்டுகிறார். இதே நிலை நீடித்தால் கட்சி தொண்டர்களை பாஜக விடம் விற்றுவிடுவார். எனவே, அக்கட்சியில் இருந்து விலகுவதாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் பதவிக்கு அழகல்ல!

சென்னை: தமிழகத்தில் 60 ஆண்டு களாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவர்கள், தமிழ ருக்கும் தமிழ் இலக்கியத்துக் கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை என ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்திருக்கும் செய்தி  விளம்பரத்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன், ‘ஆளுநர் அரசுக்கு ஆலோ சனையோ அல்லது சுட்டிக்காட்டுவது போல் இருந்தால் அதிகாரிகளின் மூலமாகவோ அல்லது குறிப்பு மூலமாகவோ வழங்க வேண்டும். இது வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறுவது போல் உள்ளது. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல’ என்றார்.