tamilnadu

img

குகேசுக்கு கேல் ரத்னா; துளசிமதி, மனிஷா, நித்ய க்கு அர்ஜூனா!

புதுதில்லி, ஜன. 17 - உலக செஸ் சாம்பியன் குகேஷ்  உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர் - வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் விளை யாட்டுத்துறையில் சிறப்பாக பங்காற்றிய விளையாட்டு வீரர் -  வீராங்கனைகளுக்கு இந்திய அரசு  சார்பில் கேல் ரத்னா, அர்ஜுனா,  துரோணாச்சார்யா ஆகிய பிரிவு களில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான விருதுகளை வெள்ளிக்கிழமை அன்று குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகை யான ராஷ்டிரபதி பவனில் நடை பெற்ற இந்நிகழ்வில் கடந்த ஆண்டு  (2024) இறுதியில் சிங்கப்பூரில் நடை பெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாட்டின் குகேஷ் தொம்மராஜூ இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயாள் சந்த் கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்சில் இரட்டைப் பதக்கம் (வெண்கலம்) வென்ற வீராங்கனையான மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்) ஆகியோரும் கேல் ரத்னா விருதை பெற்றனர்.

3 தமிழர்களுக்கு  அர்ஜூனா விருது

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ சுமதி ஆகி யோர் உட்பட 32 வீரர் - வீராங் கனைகள் அர்ஜூனா விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றனர். வாழ்நாள் சாதனையாளர் அர்ஜுனா விருதை சுச்சா சிங்  (தடகளம்), முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் (பாரா நீச்சல்)  ஆகியோர் பெற்றனர். அதேபோல துரோணாச்சார்யா விருதை (சிறந்த  பயிற்சியாளர்) சுபாஷ் ராணா (பாரா  துப்பாக்கிச் சுடுதல்), தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கிச் சுடுதல்), சந்தீப் சங்வான் (ஹாக்கி)  ஆகியோரும், வாழ்நாள் சாதனை யாளர் துரோணாச்சார்யா விருதை எஸ்.முரளிதரன் (பேட்மிண்டன்), அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ (கால்பந்து) உள்ளிட் டோரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து விருதுகளை பெற்றனர்.