கடந்த வாரம் காஞ்சி புரத்தில் கவிஞர் மைத்ரி அன்பு வழங்கிய புத்தகங்களில் ஒன்று இந்த கூத்துக்கலை நூல். இதன் அட்டைப்படம் பன்னி ரெண்டு ஆண்டுகளுக்கு முன் புரிசை கண்ணப்ப தம்பிரான் கூத்துப் பயிற்சிப் பள்ளியில் ஒரு மாத காலம் பயிற்சி பெற்ற நினைவுகளை மீட்டுகிறது. புரிசை கூத்து மன்றத்தின் ஆசிரியரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான கண்ணப்ப சம்பந்தன் அவர்கள் தர்மர் வேடத்தை வழங்கினார். அடவுகளும் கிறுக்கியும் கூத்தா டிக்கு இரு கண்கள் போன்றவை. 80 வயது நிரம்பிய கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் தனது வாழ்க்கை அனுபவங்களை மகன் முனைவர் ஏகாம்பர ராஜ சேகர் மூலம் இந்நூலாக வெளியிட்டுள் ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான கூத்து அனுபவங்களை யும், இரண்டாயிரத்திற்கும் மேற் பட்ட கூத்து, நாடகங்களில் பங் கேற்ற அனுபவங்களையும் எளிய மொழியில் பதிவு செய்துள்ளார். டாக்டர் சுதாசேஷய்யன் தமது மதிப்புரையில், கூத்துக்களரி என்ற பெயரில் ஆடல் அரங்கம் இருந்ததை யும், சிவபெருமானுக்கு கூத்தன், கூத்தாடி என்ற பெயர்கள் இருந்ததையும் குறிப்பிடுகிறார். அரை நூற்றாண்டு கால கூத்துக் கலைஞரின் அனுபவப் பிழிவாக இந்நூல் அமைந்துள்ளது என்கிறார்.
ஒரு கூத்து நிகழ்வுக்கு குறைந்த பட்சம் 10-12 கலைஞர்கள் தேவை. தாளம், ஹார்மோனியம், தவில் என இசைக்கலைஞர்கள் மூவ ரும், மொத்தம் 15 பேர் கொண்ட குழுவாக இயங்குவர். இவர்களை வழிநடத்த நிர்வாகி, ஆசிரியர் இருப்பர். கூத்து துவங்கும் முன் விருத்தம், விநாயகர் துதி, சரஸ்வதி துதி, ஆறுமுக துதி, கிராம தேவதை துதி என பாடப்படும். பின்னர் பபூன் வேடம் வந்ததும் கூத்துகளைகட்டும். விவசாயத் தொழிலோடு கூத்துக்கலையையும் இணைத்து வாழ்ந்த ஆசிரியர், ஓய்வு நேரங் களில் கூத்துப் பிரதிகளையும் பாடல்களையும் மனப்பாடம் செய்வார். நடிப்புடன் பாடும் திறமையும், வசனம் பேசும் திற மையும் ஒரு கூத்துக்கலைஞனுக்கு அவசியம் என்கிறார். விடிய விடிய மக்களை உட்கார வைத்து, அவர் களின் ரசனைக்கேற்ப கூத்து நடத்த வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். வடக்கத்தி, தெற்கத்திக் கூத்து என இரு வகைகள் உண்டு. கதைகள் ஒன்றாக இருந்தாலும் பாணி மாறு படும். தெற்கத்தி புராணக் கதைகள் ஆழமாக இருக்கும். வடக்கத்தியில் புராணக் கதையுடன் சினிமா பாடல்களும் கலந்திருக்கும். வண்ணார், வைணியர், பண்டாரம் ஆகியோரே இக்கலையை வாழ வைத்திருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கூத்தின் மீது மக்களின் நம்பிக்கை அளப்பரியது. அர்ஜுனன் வில்வித்தை பார்த்தால் திருமணம் கைகூடும், கர்ண மோட்சம் பார்த்தால் புண்ணியம் கிடைக்கும், திரௌபதி துயில் பார்த்தால் குளித்துவிட வேண்டும், அர்ஜுனன் தபசு பார்த்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் இன்றும் நிலவு கின்றன. வித்தைக்கு சத்துரு குடியும் பெண்ணும் என்ற கொள்கை யுடன், ஒருபோதும் குடித்து விட்டு கூத்தாடாத கலைஞராக வாழ்ந்துள்ளார். கலை பண் பாட்டுத் துறையின் சான்று, நல வாரிய உறுப்பினர் அட்டை பெற்றி ருந்தாலும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக கூத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த இவருக்கு இதுவரை அரசு விருதுகளோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தந்தையின் வாழ்க்கையை அவர் வாழும் காலத்திலேயே பதிவு செய்த முனைவர் ஏகா. ராஜசேகரின் பணி பாராட்டுக்குரியது. கூத்துக் கலையின் நுணுக்கங்கள், ரக சியங்கள், பழமையின் அர்த்தங் கள் அனைத்தையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. கிராமங்கள் உள்ளவரை கூத்துக்கலையும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்நூல் முடிகிறது.
கூத்துக்கலை (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) - நீ.ஏகாம்பரம்; பக்.136; விலைரூ.125; கெவின்கார்க்கி பதிப்பகம், சென்னை-44;
98406 06462.