உலகளவில் பல்கலைக் கழகத்தின் செயல்திற னை கற்பித்தல், ஆரா ய்ச்சி சூழல், ஆராய்ச்சித் தரம், தொ ழில்துறை மற்றும் சர்வதேசக் கண் ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படை யில் மதிப்பீடு செய்கிறது டைம்ஸ் உயர் கல்வி-உலக பல்கலைக்கழகம். இது 2024-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலை வெளி யிட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதற்கு முன் 160 லட்சம் ஆராய்ச்சி வெளியீடுகளில் 134 லட்சத்திற்கும் அதிகமான மேற்கோள் களை பகுப்பாய்வு செய்துள்ளது. உல களவில் 68,402 அறிஞர்களின் கருத்துக் கணிப்புகளையும் அவர்க ளது பதில்களையும் உள்ளடக்கி யுள்ளது. 2024-ஆம் ஆண்டும் எட்டா வது ஆண்டாக ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகம் தரவரிசையில் முத லிடத்தில் உள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இரண்டாவது இடத்தி லிருந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நான்காவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இந்தாண்டு இரண்டு இடங்கள் முன்னேறி மூன் றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன் றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு தரவரிசை மதிப் பீட்டில் இணைந்துள்ள நிறுவனங்க ளில் பெரும்பாலானவை ஆசியா வை உள்ளடக்கியுள்ளது.
பல்கலைக்கழகங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தியதில் அமெரிக்கா (200)முதலிடத்தில் உள்ளது. 91 கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்து வப்படுத்தியுள்ள இந்தியா பிரதி நிதித்துவப்பட்டியலில் நான்காவது இடம் என்ற சாதனையை புரிந்தி ருந்தாலும். தரவரிசைப் பட்டியலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்திய பல்கலைக்கழகங்களைக் காண முடியவில்லை. அதே நேரத் தில் சீனா 86 நிறுவனங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் கற்பித்தலில் முன்னணியில் உள்ளது, ஆக்ஸ்போர்டு மற்றும் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி சூழலில் முதலிடம் பிடித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது தனக்குரிய அந் தஸ்தை தக்கவைத்துள்ளது. இந்தியாவின் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இண்டியன் இன்ஸ் டிடியூட் ஆப் சயின்ஸ் 261ஆவது இடத்தில் உள்ளது.
முதல் பத்து பல்கலை.
ஆக்ஸ்போர்டு பல்கலை., ஸ்டான்போர்டு பல்கலை., மாசாசூ செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னா லஜி, ஹார்வார்டு பல்கலை, கேம்ப் ரிட்ஜ் பல்கலை., பிரின்ஸ்டன் பல் கலை., கலிபோர்னியா இன்ஸ்டிட் யூட் ஆப் டெக்னாலஜி, இம்பீரியல் காலேஜ் லண்டன், யேல் பல்கலை. (இவை அனைத்தும் அமெரிக்கா) 86 நிறுவனங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தி ஐந்தாவது இடத்தில் உள்ள சீனா, பல்கலைக் கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் சின்குவா பல்கலை., 12-ஆவது இடத்திலும், பெய்ஜிங் பல்கலைக்கழ கம் 14-ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா தரவரிசைப்பட்டியலில் 200 இடங்களைத் தாண்டியே இடம்பிடித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் 251-முதல் 300 இடங்களுக் குள்ளும் சென்னை அண்ணா பல் கலை., 401-முதல் 500 இடங்க ளுக்குள்ளும் உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் கற்பித்தலில் 36.9 புள்ளிகளும், ஆராய்ச்சி நடத்துவதற்கான சூழலில் 28.7 புள்ளிகளும் ஆராய்ச்சித் தரத்தில் 76.7 புள்ளிகளும், தொழில் கண்ணோட்டத்தில் 65.8 புள்ளிக ளும் சர்வதேசக் கண்ணோட்டத்தில் 20.2 புள்ளிகளும் பெற்றுள்ளது. ஆராய்ச்சிக்கான சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் வெகு வாக முன்னேறியுள்ளது. 2020-ஆம் ஆண்டு உலகளவில் 14.1 புள்ளிகளைப் பெற்றிருந்த இப் பல் கலைக்கழகம் 2025-ஆம் ஆண்டில் 28.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.