மதுரையைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி பரமேஸ்வரி கூறுகையில், எனது கணவர் பாதாளசாக்கடையில் மூழ்கி உயிரிழந்தார். இழப்பீடு ரூ. 5லட்சம் எனக்கும் லெட்சுமண னின் தாய்க்கும் பிரித்து வழங்கப் பட்டுள்ளது. எனது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ப்ளஸ்2 படித்து கணினி படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றார். மதுரையைச் சேர்ந்த சரவணக் குமார், சிவக்குமார் ஆகியோர் கழிவு நீர் கிணற்றில் இறங்கி பணி யாற்றும்போது பலியாகியுள்ளனர். சரவணக்குமாருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் 2 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள னர். காளீஸ்வரி பி.ஏ.பி.எட்., முடித் துள்ளார். இவருக்கு இழப்பீடு கொடுத்துள்ளனர். சிவக்குமாருக்கு ஜெகதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அரசு வேலை வழங்குவ தாகக் கூறியது.
இன்னும் கிடைக்க வில்லை என்றார். மதுரையைச் சேர்ந்த சோலை நாதன் தனியார் குடியிருப்பில் மலக்குழிக்குள் இறங்கும்போது உயிரிழந்தார். குடியிருப்போர் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். முத்துலெட்சுமி தமக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றார். தேனி மாவட்டம் பண்ணைப் புரத்தைச் சேர்ந்த நிகிதாஸ்ரீ, சுபாஸ்ரீ ஆகியோர் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ள னர், இவர்கள் 29.9.2022 அன்று பொதுக்கழிப்பறை செப்டிக்டேங்க் மூடி இடிந்து விழுந்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந் தைகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதுநாள் வரை வழங்கவில்லை என்றனர் குழந்தை களின் பெற்றோர். தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தைச் சேர்ந்த குழந்தைராஜ் 2011-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இவரது குடும்பம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளது. இவருக்கு பாக்கிய லெட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு அரசு வேலை வழங்கவில்லை. தூத்துக்குடியைச் சேர்ந்த பால் என்பவர் மலக்குழியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் மூன்று குழந்தை களும் உள்ளனர். தமக்கு அரசு வேலை வழங்கவேண்டும். கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முனியம்மாள் கோரிக்கை விடுத்தார். இதேபோல் கரூர்மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், கோபால், மோகன்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வருக்கும் வெவ்வேறு தன்மைகளில் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. இவர்களில் இருவர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவர் குடும்பத்தினர் வாரிசு வேலை வழங்கவேண்டும். அரசு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தங்களுக்கு தமிழக அரசு “அரசு வேலை வழங்கி” தங்களது கண்ணீரைத் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றனர். அவர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் ஆறுதல் கூறினர். அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லம் திரும்பினர்.