tamilnadu

img

விந்தணுக்களை பாதிக்கும் காற்று மாசு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

காற்று மாசு ஆண்களிடையில் மலட்டுத்தன்மை ஏற்படக் காரண மாக அமைகிறது என்று புதிய ஆய்வுகள் கூறு கின்றன. இது குறிப்பாக ஆண் இனப்பெருக்க விந்தணு செல்களின் நீந்தும் திறனை பாதிப்ப தாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. சீனாவில் 30,000 ஆண்களிடையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூலம் விந்தணு செல்கள் சரியான திசையில் நீந்தமுடியாமல் தவிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது விந்தணுக்களை சுமந்துசெல்லும் விந்து நீரின் (semen) தரத்தையும் பாதிக்கிறது.

சிரிய தூசுக்கள்  ஏற்படுத்தும் பெரிய ஆபத்து

ஜாமா நெட்வொர்க்ஸ் (Journal JAMA networks) என்ற மனித இனப்பெருக்கம் மற்றும்  சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கட்டுரை களை வெளியிடும் இதழில் இது பற்றிய கட்டுரை  சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காற்றை  மாசுபடுத்தும் துகள்களின் அளவு சிறியதாகும் போது அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக  இருப்பதையும் இந்த ஆய்வுகள் எடுத்துக்கூறு கின்றன. சிறிய அளவில் இருக்கும் மாசுக்கள் பெரிய வற்றைக் காட்டிலும் விந்து நீர் நகரும் திறனை  அதிகமாகப் பாதிக்கிறது என்று கட்டுரையின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இனப்பெருக்க வயதில் இருக்கும் ஆண்கள் காற்று  மாசில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை இது மேலும் வலியுறுத்துகிறது.

நீண்டகால முயற்சிகள்

காற்று மாசிற்கும் ஆண் விந்தணு தரத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை கண்டறிய ஆய்வாளர்கள் பல காலமாக முயற்சி செய்கின்றனர். ஆனால் இத்தகைய தொடர்பை இதுவரை விஞ்ஞானிகளால் தெளி வாக நிறுவமுடியவில்லை. இதுபோன்ற ஆய்வு கள் சிக்கல் நிறைந்தவை. அவை நிறைவு பெறாமல் இருந்ததே இதற்குக் காரணம். டிசம்பர் 2021ல் இதற்கு முன் இது குறித்து  வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை இத்தகைய பாதிப்பு பற்றி தெளிவாக எடுத்துக் கூற வில்லை. 340 சீன நகரங்களில் இருந்து சராசரி 34 வயதுடைய 33,876 ஆண்களிடம் பரிசோத னைகள் நடத்தப்பட்டன. ஷாங்காய் டான்ஜி  மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் (Tongji School of Medicine) இதற்காக வெவ்வேறு நிலைகளில் மாசினால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

2.5 மைக்ரோமீட்டர்

இவர்களின் மனைவியர் அனைவரும் 2013 ஜனவரி முதல் 2019 டிசம்பர் வரை  சேகரிக்கப்பட்ட விந்தணுக்களை செயற்கை முறையில் கருத்தரிக்கப் பயன்படும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கருவுற்றனர். இந்த ஆண்களின் விந்து நீரின் தரத்துடன் காற்று மாசிற்குக் காரணமான தூசுக்களின் அளவை ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. தூசுகளும் ஆய்வுகளும் இதற்காக ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட வர்கள் காற்று மாசின் வெவ்வேறு நிலைகளில் ஆளானபோது அவர்களை பாதித்த 2.5 மைக்ரோமீட்டர், 2.5 முதல் 10 மைக்ரோமீட்டர் மற்றும் 10 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான விட்டமுடைய தூசுகள் ஆராயப்பட்டது. விந்து நீர் சுரப்பிற்கு முந்தைய 90 நாள் பரிசோதனை காலத்தில் மாசுகளின் அளவு குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன் பின் ஆய்வாளர்கள் இவர்கள் தங்கியிருந்த மருத்துவமனைகளுக்கு சென்று விந்து நீரின் தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். 90 நாள் காலகட்டத்தில் விந்து நீர் சுரப்பின் பல முக்கிய நிலைகளில் ஆய்வு கள் செய்யப்பட்டன. விந்தணுக்களின் எண் ணிக்கை, விந்து நீரின் அடர்வு, விந்து அணுக் களின் நகரும் திறன் போன்றவை ஆராயப்பட்டது.

திசை தெரியாமல் தவிக்கும் விந்தணுக்கள்

விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்து நீரின் அடர்த்தி ஆகியவற்றுடன் நேரடியாக காற்று மாசிற்கு தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகளால் உறுதி செய்ய முடியவில்லை. என்றாலும் தூசுகளின் அளவு சிறிதாகும்போது விந்தணுக்களின் முன்நோக்கி நகரும் தன்மை (sperm motility) மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த நீந்தும் திறன் (total sperm motility) ஆகியவை பாதிக்கப்படுவதைக் கண்டறிந்தனர். 

2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான தூசுகள்

ஆய்வின்போது 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டமுடைய தூசுகள் விந்தணுக் களின் முன்னோக்கி நீந்தும் திறனை 3.6 சதவீதம்  பாதிப்பது கண்டறியப்பட்டது. இதே ஆய்வுகள் 10 மைக்ரோமீட்டர் அளவுள்ள தூசுகளில் நடத்தப் பட்டபோது இந்த பாதிப்பு 2.44 சத விகிதமாக குறைந்திருந்தது. இது வெவ்வேறு அளவுகளில் காற்றில் கலந்துள்ல நுண் மாசுக்களால் விந்து நீரின் தரம் வேறுபட்ட முறையில் பாதிக்கப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கல் கூறுகின்றனர். நுரையீரலிற்குள் நுழையும் மாசு சிறிய அளவில் இருக்கும் மாசு பெரியதை விட மனித நுரையீறலிற்குள்  ஆழமாக எளிதில் செல்லமுடியும் என்பதே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. ஆய்வில் பங்கேற்றவர்கள் அதிக காற்று மாசிற்கு ஆளானபோது அவர்களின் இனப்பெருக்க உறுப்பில் விந்து நீர் சுரக்கும் 90 நாள் சுரப்பு  காலத்தில் (spermatogenesis) மற்ற இரு  நிலைகளை விட பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆழமான ஆய்வுகள்

ஆண் இனப்பெருக்க செல்களுக்கும் காற்று மாசிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்த பல ஆய்வுகள் இதற்கு முன் நடந்துள்ளன  என்றாலும் அவை எதுவும் இத்தகைய உறுதியான முடிவிற்கு வரவில்லை என்று  ஷெஃப்பீல்டு (Sheffield பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒவ்வாமைப் பிரிவின் பேராசிரியர் ஆலன் பேசி (Allan Pacey) கூறுகிறார்.

கற்பனையல்ல உண்மை

இது பற்றி முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் பலராலும் ஏற்கப்படவில்லை என்றாலும் இம்முடிவுகள் காற்று மாசு எவ்வாறு மானுட இனப்பெருக்கத்திறனைப் பாதிக்கிறது என்பது கற்பனையல்ல நிஜம் என்பதை நிரூ பித்துள்ளது. விந்தணுக்களின் உருவவியல், அளவு, வடிவம், போன்றவை பற்றி இந்த ஆய்வறிக்கை விரிவாகக் கூறவில்லை என்பதால் இது பற்றிய தீவிர ஆய்வுகள் வரும் காலத்தில் நடத்தப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 

ஒரு சிட்டிகை உப்பு

இந்த முடிவுகள் ஒரு சிட்டிகை உப்பு போல எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிக மாசுள்ள இடங்களில் வாழும் ஆண்கள் தந்தையாவதற்குரிய திறனை இழந்தால் அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. புவி வெப்ப உயர்வினால் குழந்தை பிறப்பு பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் காற்று மாசினால் நாளை மனித குலமே மலடாகும் ஆபத்து உள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.