tamilnadu

img

எது கல்வி?

இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்ற பிறகு, இந்தக் கடிதம் நாஜிக்களின் சித்தரவதைக் கூடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கடிதம் ஆசிரியர்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அன்புக்குரிய ஆசிரியர்களே, நான் சித்தரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்து உயிர் பிழைத்தவன். ஒரு மனிதன் பார்க்கக்கூடாததை என் கண்களால் பார்த்தேன். கற்றறிந்த பொறியாளர்கள் எரிவாயு உலைகளைக் கட்டினார்கள். கல்வி கற்ற இயற்பியல் வல்லுநர்கள் குழந்தைகளுக்கு விஷமேற்றினார்கள். பயிற்சியளிக்கப்பட்ட செவிலியர்கள் குழந்தைகளைக் கொன்றனர். உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்ற பட்டதாரிகள் பெண்களையும், சிசுக்களையும் சுட்டும், எரித்தும் கொன்றார்கள்.  எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் மாணவர்கள் மனிதர்கள் ஆவதற்கு உதவுங்கள். உங்கள் முயற்சிகள் ஒருபோதும் கற்றறிந்த கொடியவர்களையோ, திறன் படைத்த மனநோயாளிகளையோ, கல்வி கற்றும் தற்குறிகளாகவோ உருவாக்கி விடக்கூடாது. வாசித்தல், எழுதுதல், கணிதம் உள்ளிட்டவை முக்கியமானவை என்றாலும், நமது குழந்தைகளை மேலும் மனிதத்துவம் கொண்டவர்களாக உருவாக்கினால்தான் அவை தனது பணியைச் செய்ததாக இருக்கும்.

;