வீரம் செறிந்த பெண்களின் கதை - செ. தமிழ்ராஜ்
முதல் மழை, முதல் காதல், முதல் முத்தம், என மனித வாழ்வில் கொண்டாடப்படுவதற்கு ஏராளமான முதல் காரணங்கள் இருக்கின்றன, அப்படி பத்தோடு பதினொன்றாக கடந்து விட முடியாது இந்த முதல் பெண்களை, ஆணாதிக்கம் மிகுந்த, கட்டுப்பாடுகள் நிறைந்த, பழந்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து, சாதனை மகளிராய் தடம் பதித்து, அந்த பாதையின் வழியே ஒரு பெரும் பெண்ணினத்திற்கே வழிகாட்டியாய் ஒளி விளக்கு ஏற்றிய இம் முதல் பெண்கள் நிச்சயம் வரலாற்றில் கல்வெட்டாய் என்றென்றும் நிலைத்திருக்க கூடியவர்கள்.
இன்றைய தேதியில் பெண்கள் சாதிக்க பல தடைகள் இருக்கும் போது 150 வருடங்களுக்கு முன் அது எவ்வளவு கடினமாக இந்திருக்கும் என்பதை 43 முதல் பெண்களை அவர்களின் வீரம் செரிந்த வாழ்க்கையை கடினமாக உழைத்து ஓரிரு பக்கங்களில் எளிய முறையில் வாசிக்கத் தந்துள்ளார் லூயிஸ் அவர்கள். 43 பெண்களில் 3 தலித் 3 இஸ்லாமியர் 6 கிறிஸ்தவ பெண்கள் தவிர்த்து மற்ற அனைவரும் முற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். 43 பேரும் பொருளியல் ரீதியாக மேம்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள்.
அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் கல்வி கற்று உயர் பதவியில் இருந்த காரணத்தால் பெண்கள் கல்வி பெறவும் சமூகத்தில் உயர் பொறுப்புகளை அடையவும் காரணமாக இருந்தது. அத்துடன் அன்றிருந்த சமூகச் சூழலும் அரசியல் இயக்கங்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆங்கிலேயர்கள், காங்கிரஸ், சமூக நீதி கட்சிகள், திராவிட, பொதுவுடைமை இயக்கங்கள் யாவும் சமூகத்தில் அதற்கான இடத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்திருந்தது என்றால் அது மிகையான கருத்தில்லை.
படுகர் இனப் பெண் அக்கம்மா துவங்கி ஜோதி வெங்கடாச்சலம் வரை அவர்கள் தொட்ட இடங்கள் யாவும் சாதனைச் சிகரங்கள். அவற்றில் இருந்து இன்று பெண்கள் விண்வெளி தாண்டி சாதனைப் பறவைகளாய் பிரபஞ்ச வெளிகளில் அழுத்தமான தடத்தை பதித்து வருகிறார்கள்.
முதல் பெண்கள் குறித்து போதுமான தகவல்கள் இல்லை என்பதும், அதை அந்த குடும்பத்தினர் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதும் வருத்தத்திற்கு உரியது. பெரும் சிரமப்பட்டு தேடித்தேடி முதல் பெண்களின் அரியதகவல்களை தந்துள்ளார்.முதல் பெண் ஒலிப்பதிவாளர் மீனாநாராயணன் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை
ஆனால் கே.பி.ஜானகியம்மாள் குறித்து மிகச்சிறிய புத்தகமே கிடைத்தது என்றும் பெரியாரிய, திராவிட, பொது உடமை இயக்கங்கள் கூட பெண்களின் உழைப்பை இருட்டடிக்கின்றன என்றும் முன்னுரையில் சொல்லிவிட்டு, கே.பி. ஜானகியம்மாள் குறித்த கட்டுரையில் தோழர் சங்கரய்யாவின் தம்பி தோழர் என்.ராமக்கிருஷ்ணன் அவர்கள் 3 புத்தகங்கள் எழுதி உள்ளார் என்று சொல்வதும் முன் பின் முரணாக உள்ளது, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளலாம்.
முதல் பெண்களை தேடித் தொகுத்த நூலாசிரியர் நிவேதா லூயிஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்
நூல் : முதல் பெண்கள்
ஆசிரியர்: நிவேதா லூயிஸ்
பக்கம் : 224/ விலை : 280
வெளியீடு : மைத்ரி புக்ஸ்
ஒரு போராட்டக்காரனின் நினைவுக் குறிப்புகள் - ம.கதிரேசன்
கல்வி- கலாச்சார மக்கள் இயக்கமாக நடைபெற்ற அறிவொளி இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டியமைத்தவர்களில் முக்கிய
மானவரான கல்வியாளர் பேரா.ச. மாடசாமி, ஒருவரின் சிறப்புத் தன்மையை துல்லியமாக அடையாளம் காண்பவர். அவர் போஸ் பாண்டி
யனை இவ்வாறுக் குறிப்பிட்டார்:”அந்த மலையைக் குடைய வேண்டும் போஸ் பாண்டியன்! எனச் சொன்னால் அடுத்து அவர்
அந்த மலையைக் குடைந்து மலையின் மறு முனையில் இருந்து சார் மலையைக் குடைந்து
விட்டேன் என்று சொல்லக்கூடிய செயல்திறன் மிக்கவர்.”
அப்படிப்பட்ட செயலூக்கம் மிக்க போஸ்பாண்டியன் தனது சொந்த நினைவுகளில்
இருந்து 1950 முதலான கடந்த காலத்தை திரும்பிப்
பார்க்கிறார். இடதுசாரி சித்தாந்தத்தால் கவ்விப்பிடிக்கப்பட்ட ஒருவரது வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதற்கு உதாரணம் “இணுங்கு.”
இவரது பெற்றோர் அக்னிதத் சீனிச்சாமி - தாயம்மாள் இருவருமே ஆசிரியர்கள். ஊரார் எதிர்ப்புக்கிடையில் காதல் திருமணம். அன்றைய தமிழக சட்டமன்ற சபாநாயகர் செல்லப் பாண்டியன் உதவியுடன் திருமணம்.
சீனிச்சாமிக்கு நெருப்பு வீரன் என்ற பொருள் கொண்ட அக்னிதத் பட்டம் காஞ்சி காமகோடி
பீடம் வழங்கியது.
தீவிர காங்கிரஸ் பிரபலம். அனல் பறக்கும் மேடைப் பேச்சாளர். சீனிச்சாமியின் பேச்சு” சீனி
போல இனிக்கும் “என்பது காமராஜர் அவருக்கு
எழுதிக் கொடுத்த பாராட்டுரை.
1956 இல் நடைபெற்ற கேரளா, தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் என். கணபதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இளையான்குடியில் இருந்து மூணார், தலையார் எஸ்டேட் பகுதிக்கு ஒரு குழந்தையுடன் புலம்பெயர்கின்றனர். எஸ்டேட் தொழிலாளர் குழந்தைகளுக்கான பள்ளியில் இருவருக்குமே ஆசிரியர் பணி.
போஸ்பாண்டியனின் பிறப்பு அங்கேதான். மொத்தம் ஆறு குழந்தைகள்.
சீனிச்சாமி அரசியல் ,தொழிற்சங்க, சமூக செயல்பாட்டுக்காக ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர்.
மொழிச்சிறுபான்மையினரான தமிழர்களின் நலனுக்காக பல்வேறு காரியங்களைச் செய்கிறார்.
அன்று, மூணார் பகுதியில் நான்காம் வகுப்பு வரையில் மட்டுமே பள்ளிகள் உள்ள நிலையில் எஸ்டேட் தொழிலாளிகளில் பிள்ளை
கள் 500 பேருக்கு மேல் கோவை போன்ற மேற்கு
தமிழகப் பள்ளிகளில் சேர்த்தவர் சீனிச்சாமி.
போஸ் பாண்டியனும் உடுமலைப்பேட்டை யில் பதினொன்றாம் வகுப்பு வரை ஆதி திராவிடர் நலவிடுதியில் தங்கிப் படித்தவர் தான்.
பின்னர் தூத்துக்குடி வ. உ. சி. கல்லூரியில் பட்டப்படிப்பு.
எழுத்தாளர் பாம்பன் மலை, தீர்த்தமலை, ஆனைமுடி சூசனி மறையூர் என மலைகளும் மலை சார்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்
களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். அவ
ருடன் நாமும் காட்டு நெல்லிக்கனிகள் ஈச்சங்
காய்களைத் தின்று ஆற்றுநீரைப் பருகுகிறோம்.
உள்ளூர் மக்களின் வரலாறும் ஆவணப்
படுத்தப்படும் வரிசையில் “இணுங்கு ” நூலையும்
சேர்த்துக் கொள்ளலாம். புத்தகத்தின் தலைப்பு மூணார் தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் கூடையை சுமந்து கொண்டு தேயிலைக் கொழுந்துகளை சுட்டுவிரல், கட்டைவிரல் கொண்டு இணுங்கி எடுக்கும் காட்சியிலிருந்து பெறப்பட்டதாகும்.
மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக போராடிய மனிதர்களை சந்திக்கிறோம்.
கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட் என்பது உரிமையாளர்களைக் குறிப்பதல்ல. ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடுவதற்கான மலைப்பகுதிகளை அடையாளம் காட்டிய முதுவன் பழங்குடியைச் சேர்ந்தவர்களின் பெய
ராகும் அது.
பாண்டி நாட்டுப் போர்கள், கலகங்களில் இருந்து தப்பி புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான் சாதியைக் கைவிட்டு மூணார் அஞ்சு நாடு பகுதிகளில் வாழ்பவர்கள் எனும் வாய்மொழி வரலாறுகளைக் கேட்கிறோம்.
எழுத்தாளர் வேர் பிடித்து விளைந்த நிலம் மறையூர். அரசியல் சித்தாந்தமும் போராட்ட
உணர்வும் வேர்ப்பிடித்த இடம். போஸ்பாண்டியன் முதலில் கேரளா மாநில அரசுத் துறைக்கு தேர்வாகி பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கிராம வங்கி தேர்வில் தேர்வாகி பாண்டியன் கிராம வங்கியில் பணி சேர தமிழ்நாடு வருகிறார்.
வங்கிப் பணியில் பணிக் கலாச்சாரம், மக்கள் மீது நேசம், இடதுசாரி அரசியல் தத்துவம் அடித்தளத்தில் வீரியமான போர்க்குணம்
மிக்க அவரது தொழிற்சங்க செயல்பாடுகள்.
தானுண்டு - தனது வேலை உண்டு என்று தனக்குள் ஒடுங்காதவர்கள் இடதுசாரி தொழிற்சங்க செயல்பாட்டாளர்கள்.
சிறப்பான வங்கிப் பணி கூடவே மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் மனிதாபிமானம் மிக்க தலையீடுகள்.
வங்கி வாடிக்கையாளர் பாக்கியலட்சுமி யிடம் ஒரே ஒரு கேள்வி மூலம் அவரை மறு மணம் செய்ய வைத்ததும், அவரது இளைய மகள் குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டு படித்து
வங்கி மேலாளர் ஆவதும், மார்க்சிய ஆளுமை தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் உதவியுடன் ஜெயலட்சுமிக்கு சாதி மறுப்பு திரு
மணம் செய்து வைப்பதும் மானுட அன்பின் அழகான தருணங்கள்.
மாற்றுப் பணியில் அவர் விருதுநகர் மாவட்டத்தின் காரியாபட்டி ஒன்றியத்தில் எழுச்சி
கரமாக அறிவொளி இயக்கத்தை நடத்தியதை
உடன் பணிபுரிந்தவன் என்ற முறையில் என்னைப் பெரிதும் மலைக்க வைத்தது. அதுவரையில்
காரியாபட்டி மண்ணை மிதித்தறியாத போஸ் பாண்டியன் ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி
னார். அரசுத் திட்டமாக அறிவொளி இயக்கம் முடிந்த போது, பெண்கள் கற்றதை தக்க வைப்ப
தற்கும், கூடவே பொருளாதார மேம்பாட்டுக் காகவும் துளிகள் சேமிப்பு இயக்கத்தில் அங்கே மேலாளர் என்ற முறையில் போஸ் பாண்டியன் பங்கு முக்கியமானது.
அறிவொளியில் இருந்து வங்கிப் பணிக்குத் திரும்பினாலும் மாணவர்களுக்கு வாசிப்புத் திருவிழா, புத்தக மாநாடு என பன்முக செயல்பாடுகள் தொடர்கின்றன.
பெரு முயற்சி மேற்கொண்டு இணுங்கு புத்தகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார் போஸ். தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள்,
அறிவொளி இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள், வங்கி ஊழியர்கள் கட்சித் தோழர்கள் என அனை
வரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது.
ஒரு போராட்டக்காரனின்
நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்: பி.எஸ்.போஸ்பாண்டியன்
SIBA வெளியீடு / விலை ரூ.200 அஜீஸ் நகர், அருப்புக்கோட்டை 626 101
94866 67510