வளமான எல்ஐசி; வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!
தென்மண்டல இன்சுரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36 ஆவது மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 9 10 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ‘வளமான எல்ஐசி; வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்’ என்னும் தலைப்பில் மாரத்தான் போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை, அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமானுல்லாகான், முன்னாள் பொதுச் செயலாளர் வேணுகோபால், பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, இணைச் செயலாளர் கிரிஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.