“மதம் என்பது இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா அற்ற சூழலில் அது ஆன்மா. மதம் என்பது மக்களுக்கு வாய்த்த அபினி” - காரல் மார்க்ஸ். ஆம். மதம் என்பது கோடிக் கணக்கான மக்களுக்கு அபினிதான். மத வழிபாடுகள் நடத்தி “இறைவனிடம்” தங்கள் கோரிக்கை களையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் போது பலர் தன்னிலை மறப்பதை பார்க்கி றோம். வேண்டுதல் முடிந்த பிறகு பலரும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். இனி அனைத்தையும் “அவன்” பார்த்துக் கொள் வான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படு கிறது. சாதி, மத வேறுபாடுகளை கடந்து பரவலான மக்களிடம் பொதுவாக ஏற்படும் உணர்வாகும் இது. இத்தகு சூழலில் தான், கோவில் திரு விழாக்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டி வருகிறது. ஆனால், கோவில் திரு விழாக்களில் சாதி மத ஏற்றத்தாழ்வுகள் ஏராள மான பிரச்சனைகளையும், பதட்டத்தையும் உருவாக்கி விடுகின்றன. சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுவர்ண மூர்த்திஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்சனைகள் தமிழக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவை ஆகும். இக்கோவிலில் தேர் இழுக்கும் உரிமையை பெறுவதற்காக தலித் மக்கள் கால் நூற்றாண்டு காலமாக போராடி வருகிறார்கள். 1979 ஆம் ஆண்டு சின்ன உஜ்ஜனையில் ஒரு சம்பவம் நடக்கிறது. கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனையில் தலித் பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தலித் மக்கள் கண்டதேவி தேர் திருவிழாவிற்கு வர மறுத்துவிடுகிறார்கள். ஆனால், மீண்டும் 1997 ஆம் ஆண்டு தலித் மக்கள் கண்டதேவி தேர்த் திருவிழாவில் பங்கேற்க வருகிறார்கள். இதே ஆண்டு தேர் திருவிழாவில் பங்கேற்ற தலித் மக்களை சாதி இந்துக்களிடையே செயல்பட்ட சாதிய சக்திகள் தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர் திருவிழாவிற்கு முதல் நாள் உயர் நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு.. “அமைதி விரும்பும் மக்கள் அமைதியாக சடங்குகளில் பங்கேற்கும் வகையில் கொந்த ளிப்பான சூழல் உருவாவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சூழலுக்கு தகுந்தாற்போல் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்”. இவ்வாறு தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, இரு தரப்புகளும் கொடுத்த உறுதிமொழியை கணக்கில் எடுத்துக் கொண்டது. “மனு தாரரோ, பொது மக்களோ சாதிப் பாகுபாடு இல்லாமல் கோவிலின் பாரம்பரிய பழக்கங்களுக்கு ஏற்ப சடங்குகள் முடிந்த பிறகு ஒரு மணி நேரத்திற்குள் நாட்டார்கள் தேர் இழுக்கிற போது தேர் இழுக்க அனுமதிக்கப்படு வார்கள்” என்பதற்கு இரு தரப்பினரும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என உறுதி எடுத்துக் கொண்டனர். ஆக, தலித் மக்கள் உட்பட அனைத்து பிரிவினரும் தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்பே, உயர்நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது. திருவிழாவன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டார்கள்.
இரண்டு தரப்பும் பெரு வாரியான மக்களை திரட்டியிருந்தார் கள். கொந்தளிப்பான சூழல் இருப்பதாக கருதிய மாவட்ட நிர்வாகம் 144 (2)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தது. இதர சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு தேர்த் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்து விட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த இரண்டு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஏராளமான தலித் மக்கள் கைது செய்யப்பட்ட னர். சில நாட்டார்களும் கூட கைது செய்யப் பட்டனர். இரு தரப்பும் தங்களை தாக்கியதாக பரஸ்பரம் புகார்கள் தெரிவித்தனர். பலர் காயமடைந்தனர். அடுத்து 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிகழ்வு களை கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு தேர்த் திருவிழாவிற்கு முந்தைய நாள் மீண்டும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு... “பிரச்சனைக்குரிய ஒரு விஷயம் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறது. அதை கவனமாக தீர்க்க வேண்டியிருப்பதால் சம்மந்தப்பட்ட அதி காரிகள் முன்பு பிரச்சனையை கிளப்புமாறு மனுதாரர்களுக்கு வழிகாட்டுவது தான் சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். விவ காரத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை மனதில் கொண்டு பொருத்தமான ஆணை களை வெளியிட சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பார்கள்.” நீதிமன்ற தீர்ப்பின்படி இரு தரப்பும் அளித்த மனுக்கள் அடிப்படையில் இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு உத்தரவு பிறப்பித்தார் (ஜூன் 26, 1999). “ஆரம்பிக்கப்படும் சடங்குகள், பட்டம், பரி வட்டங்கள் எனும் மரியாதைகள் நான்கு நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கப்படும். இதற்கு பிறகு தேர் ஊர்வலம் துவங்கும்போது சாதி, குலம், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா இந்துக்களுக்கும் தேர் இழுக்கும் உரிமை அளிக்கப்படும் ” என்பது தான் அந்த உத்தரவு. 1998ஐ போலவே 1999லும் சாதி இந்துக்கள், தலித் மக்கள் ஆகிய இரு தரப்பினரும் பல்லா யிரக்கணக்கில் திரண்டனர்.
காவல்துறையின ரும் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தனர். பதட்டம் நிறைந்த மேற்கண்ட சூழலில் நாட்டார்கள் தங்களுக்கான கோவில் மரியா தையை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து கோவில் ஆணையர் தேர் இழுப்பதை நிறுத்தி வைத்து ஆணையை வெளியிட்டார். ஆக, இந்த ஆண்டும் தேர் இழுக்கப்படவில்லை. அடுத்து 2000, 2001 ஆகிய ஆண்டுகளிலும் தேர் இழுப்பதை நிறுத்தி வைத்தே அற நிலையத் துறை ஆணையர் ஆணையை வெளி யிட்டார். அடுத்து, 2002 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக் காலமாகும். இதற்கு முந்தைய ஆண்டு களில் தேர் இழுக்கப்படாததால் 2002ல் எப்படி யாவது தேர் இழுத்து விட வேண்டும் என அஇஅதிமுக அரசு உறுதிகாட்டியது. அவ்வாறு தேர் இழுக்கப்படவும் செய்தது. ஆனால், தேர்த் திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க முடிய வில்லை. சாதி இந்துக்கள் பெருமளவு பெண் களையும் திரட்டியிருந்தனர். தலித் மக்கள் தேர் இழுக்கும் இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. இதற்காக முன்னதாகவே தேர் இழுக்கும் இடத்தில் சாதி இந்துக்கள் பெண்கள் உள்பட கூடிவிட்டனர். தலித் மக்கள் தேர் இழுக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட முடியாதபடி காவல்துறையினர் சாதி இந்துக்களுடன் இணைந்து நின்று செய்த ஏற்பாடுகள் இவை என தலித் மக்கள் மிகுந்த ஆவேசத்துடன் புகார் கூறினார்கள். 2003ஆம் ஆண்டிலும் நிலைமையில் மாற்றம் இல்லை. இந்த ஆண்டு ஏராளமான தலித் மக்கள் கூடிவிட்டனர். தேருக்கு அருகி லும் வந்துவிட்டனர். தலித் மக்கள் தேர் இழுப்பதை தடுக்க இம்முறை சாதி இந்துக்கள் புதிய வழிமுறைகளை கையாண்டனர். அவர் கள் கோவில் மரியாதையை பெற்றவுடன் தமது குடும்பத்தினருடன் பெரும் திரளான எண்ணிக் கையில் தேரை நோக்கி அணிவகுத்து வந்தனர். அரசு அதிகாரிகளின் பாரபட்சத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு வந்தனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்தனர்.
தலித் மக்கள் தேர் இழுத்தால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என சாதி இந்து பெண்கள் மிரட்டினார்கள். தங்களை அவதூறாக பேசியதாக தலித் மக்களும் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாவட்ட ஆட்சியர் அவசரமாக நடத்திய பேச்சுவார்த்தைகளும் பலனளிக்கவில்லை. எனவே, இம்முறையும் மிரட்டலும், பதட்டமும் உருவாகி உள்ளதாகக் கூறி தேர்த் திருவிழா நடத்தப்படாது என மாவட்ட நிர்வாகம் - கோவில் நிர்வாகம் அறிவித்தன. 2004 ஆம் ஆண்டிலும் பதட்டத்தை காரணம் காட்டி தேர் திருவிழா நடத்தப்பட வில்லை. இதன் பிறகும் தொடர்ச்சியான பல ஆண்டுகளில் தேர் திருவிழா நடத்தப்பட வில்லை. தலித் மக்கள் தேர் இழுப்பது என்பது கால் நூற்றாண்டு காலமாக ஒரு கனவாகவே நீடிக்கிறது. தலித் மக்களுக்கு சம உரிமை அளிக்கவும், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவும் தவறியதற்காக தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் 2005 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநில செயலாளர் என்.வரதராஜன் கண்டித்தார். மேலும், இதே ஆண்டு தலித்துகளின் தேர் இழுக்கும் உரிமையை நிலைநாட்டும்படி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவையும் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் தலித்துகளின் சட்டப்பூர்வ உரிமையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. 2005 ஜூன் 18 அன்று தலித் மக்களின் தேர் இழுக்கும் உரிமையை அங்கீகரித்து தேர்த் திருவிழாவை நடத்தும்படி தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலி யுறுத்தி மோகன் எம்.பி., தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்திரள் உண்ணாவிரதம் நடத்தியது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன், அப்போதைய மாவட்டச்செயலாளர் அர்ஜூனன், இப்போதைய மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு - மாவட்டக்குழு தோழர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2005 தேர்த் திருவிழா நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த நாளில் சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பால பாரதி, என்.நன்மாறன் இருவரும் தேவக்கோட்டைக்கு வந்திருந்தனர். என்.வரதராஜன் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அன்றைய தினம் தலித் மக்களும் பங்கேற்கும் வகையில் தேர் இழுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பதட்டமான சூழ்நிலை இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் அன்றைய தினமும் தேர்த் திருவிழாவை ரத்து செய்துவிட்டது.
2005 ஜூலை 3 அன்று தலித்துகளின் உரிமை களை நிலைநாட்ட தொடர்ந்து தவறிவரும் தமிழக அரசு நிர்வாகத்தை கண்டித்து காரைக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் அன்றைய சிபிஐ(எம்) மாநில செயலாளர் என்.வரதராஜன், சிபிஐ மாநில செயலாளர் தா.பாண்டியன் உட்பட இரு கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேற்கண்ட பல முயற்சிகள் - போராட்டங்கள் நடந்தபோதிலும் கடந்த 25 ஆண்டுகளாக (1997 முதல்) தேவக்கோட்டை, கண்ட தேவி ஆலயத்தில் தலித்துகள் தேர் இழுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதே உண்மை. அவர்கள் தேர் இழுப்பதை தவிர்ப்பதற்காக பல ஆண்டுகள் தேர்த் திருவிழாவே நடத்தப்படவில்லை என்பதும் மற்றொரு உண்மை. தலித்துகளின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் மனித உரிமை மீறல் இது என்பதை தவிர வேறு என்ன?