சென்னை,செப்.16- ஆயுத பூஜை, தீபாவளி நெருங்கும் நிலையில் பால்கோவா, மைசூர்பா உள்ளிட்ட இனிப்புகளின் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்க ளின் விலை கடந்த ஜூலையில் உயர்த் தப்பட்டது. இந்நிலையில் குலாப்ஜா மூன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புக ளின் விலையை உயர்த்தி ஆவின் உத்தர விட்டுள்ளது. இதன் முழு விவரம்: 125 கிராம் குலாப்ஜாமூன் ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் ரசகுல்லா ரூ.40 லிருந்து ரூ.45 ஆகவும், 500 கிராம் பால் கோவா ரூ.210 லிருந்து ரூ.250 ஆக உயர்த்தி யுள்ளனர். 1 கிலோ சர்க்கரை இல்லாத கோவா ரூ.520 லிருந்து ரூ.600, 100 கிராம் மில்க் பேடா ரூ.47 லிருந்து ரூ.55 எனவும் 500 கிராம் மைசூர்பா ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது.