tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 23- திமுக தலைமையிலான மதச்சார்  பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் திங்களன்று (மார்ச் 23)  அண்ணா அறிவாலயத்தில் கையெ ழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வின் போது திமுக பொதுச் செயலாளர் க. துரைமுரு கன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செய லாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா,  உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்  பினர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனக ராஜ், கே. சாமுவேல்ராஜ், எஸ். கண்  ணன் ஆகியோர் உடனிருந்தனர். தொகுதி உடன்பாட்டிற்குப் பின்,  செய்தியாளர்களுக்கு பெ. சண்முகம்  பேட்டி அளித்தார். கூட்டணியின் மகத்தான  வெற்றிக்கு பாடுபடுவோம் அப்போது, “கூடுதல் தொகுதி களைப் பெற கடுமையாக முயற் சித்தோம்; முதலமைச்சரோடும் இரண்டு முறை பேசினோம்; சிபிஎம்  எடுக்கும் நிலைப்பாடு எந்த விதத்தி லும் அதிமுக -பாஜக கூட்டணிக்கு உதவி செய்திடும் வகையில் இருந்து  விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடும், கூட்டணியின் ஒற்று மைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் இருந்து விடக் கூடாது என்ற அக்கறையோடும் 5 தொகுதிகளை தற்போது ஏற்றுக்  கொண்டுள்ளோம். இந்த எண்ணிக் கையில் எங்களுக்கு திருப்தி இல்லை  என்றாலும், சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்  கொள்ளும்” என்று பெ. சண்முகம் தெரிவித்தார். செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதி லளித்த பெ. சண்முகம், “இன்றைய  தினம் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணனும் நானும் முதலமைச் சரை சந்தித்தபோது தொகுதிகள் எண்ணிக்கை குறைப்பை கட்சி அணிகளால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை; மாநிலக் குழுவும் மாநில  செயற்குழுவும் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை தெரிவித்தோம்; இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களை தெரிவித்து 6 தொகுதிகளை ஒதுக்கக் கோரினோம். அப்போதும் தங்களுக்குள்ள சிரமங்களைக் கூறி  5 என்ற எண்ணிக்கையை ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்று கூறினார்.  எனவே, இதை நீட்டித்துக் கொண்டு  சென்றால் தேர்தல் பணிகள் பாதிக் கும். பிற கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்வதும் காலதாமதம் ஏற்படும் என்பதால் இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டோம்” என்றார். விருப்ப தொகுதிப் பட்டியல் கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை உள்பட சிபிஎம் போட்டியிடுவதற்கு விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் திமுக தலைவரிடம் கொடுத்துள்ளோம். தலைநகரம் சென்னைக்குள் அவசியம் ஒரு தொகுதி வேண்டும் என்றும் கோரி யுள்ளோம். அதற்கான பேச்சு வார்த்தையை நடத்தும் போது கவ னத்தில் கொள்கிறோம் என்று தெரி வித்துள்ளனர் என்றும் பெ.சண்முகம் கூறினார். மதச்சார்பற்ற அணியின் ஒற்றுமையே முக்கியம் எதற்கு தற்போது தேர்தல் நடக்கி றதோ அதுதொடர்பான பேச்சு வார்த்தையை மட்டும்தான் சிபிஎம் நடத்தும் என்று தெரிவித்த பெ. சண்  முகம், இந்தக் கூட்டணியின் ஒற் றுமை சீர்குலைந்து விடக்கூடாது; அதற்குக் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு இருந்து விடக்கூடாது; மதச்சார்பற்ற அணியின் ஒற்றுமையில் தான், இந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில்  அணியின் வெற்றி அமைந்திருக்கி றது. சிபிஎம் எடுக்கும் சிறு மாறுத லான முடிவுகள் அந்த வெற்றிக்கு  குந்தகம் விளைவித்து விடக்கூடாது என்ற அடிப்படையில் தான், தொகுதி  எண்ணிக்கையில் திருப்தி இல்லை என்றாலும் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று பெ. சண்முகம் மீண்டும் தெளிவுபடுத்தினார்.