tamilnadu

img

மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம்

சென்னை, செப்.25- இந்து சமய அறநிலை யத் துறையின் கீழ் செயல் படும் கோவில்களுக்கு ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.  பெண் ஓதுவார்கள் பணி புரிய உள்ள கோவில்கள் விவரம் வருமாறு:-  பாடி திருவல்லீஸ்வரர் கோவில்-பார்கவி, வில்லி வாக்கம் அகத்தீஸ்வரர் சுவாமி கோவில்-தாரணி, ராயப்பேட்டை சித்தி புத்தி  விநாயகர் மற்றும் சுந்த ரேஸ்வரர் கோவில்-சாரு மதி, மயிலாப்பூர் முண்டகக் கண்ணி அம்மன் கோவில் -சிவரஞ்சனி. சைதாப் பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்-கோமதி. நிகழ்ச்சியில் மேலும் திருக்கோவில்களில் பணி புரிந்து பணி காலத்தில் உயிரிழந்த 3 பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை களையும் அமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் வாழ்த்து பெண் ஓதுவார்கள் நிய மிக்கப்பட்டதற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித் துள்ளார். முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் “சமத்து வத்தை நோக்கிய தமிழி னத்தின் பயணத்தில் மற்று மோர் மைல்கல்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிச் சாதனை மகு டத்தில் மற்றுமோர் வைரம்!  சுருங்கச் சொன்னால், திராவிட இயக்கப் பற்றா ளர்கள் புகழ்வது போல், இது “பெரியாரின் நெஞ்சில்  நமது திராவிட மாடல் அரசு  வைக்கும் ‘பூ’. அமைச்சர்  பி.கே.சேகர்பாபு  அவர் களை வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.