tamilnadu

img

நிபந்தனையின்றி 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க வேண்டும்

4ஜி, 5ஜி சேவைகளை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 10 ஆவது தமிழ் மாநில மாநாடு வலி யுறுத்தி உள்ளது. சங்கத்தின் 10 ஆவது மாநில மாநாடு பிப்.18  அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தேசிய பணமாக்கல் திட்டம் என்ற  பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துக் களை விற்கக் கூடாது. 3 ஆவது ஊதிய மாற்றத்தை 1.1.2017 முதல் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை 1.1.2017 முதல் மாற்றம்  செய்ய வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக் கும், 1.10.2000-க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழி யர்களுக்கும், 30 சதவீத ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும். இலாக்கா போட்டி தேர்வுகளை எளிய முறையில் நடத்த வேண்டும். 1.1.2007 முதல் 23.3.2010 வரை பணியில் சேர்ந்த ஏடிடி ஊழியர் களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நிய மனங்கள் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் 21 பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் மாநிலத் தலைவராக எஸ்.மகேஸ்வரன், செயலாளராக பி. மாரிமுத்து, பொருளாளராக வி.செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.