திருநெல்வேலி, ஜன.22 - தாதுமணலை முறைகேடாக அள்ளிய விவகாரத்தில் 6 தாது மணல் நிறுவனங்களுக்கு ரூ.3,528 கோடி அபராதம் விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் காணப்படும் தாது மண லுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. இந்த தாது மணலில் கதிரி யக்கதன்மை கொண்ட இலிமனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோ னோசைட் ஆகிய விலை மதிப்பில்லாத தாது உப்புகள் உள்ளன. அணு சக்திக்கு தேவையான இயற்கையான கதிரியக்க தனிமங்கள் இந்த தாது மணலில் உள்ளன. தமிழக கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் இந்த தாது மணலுக்கு உலகளவில் கூடுதல் மதிப்புள்ளது. கோடி, கோடியாக லாபம் கொட்டும் இந்த தாது மணலை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த தாது மணல் கொள்ளை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்து விசாரணைக்கு வழக்கை எடுத்துக் கொண்டது. சட்ட விரோதமாக தாது எடுக்கப்படு வதாக வந்த புகார்களின் அடிப்படை யில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தாதுமணல் எடுப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. தாது மணல் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.5,832 கோடியை தனியார் தாதுமணல் ஏற்று மதியா ளர்களிட மிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டி ருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தாது மணல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட சுமார் 80 லட்சம் டன் தாதுமணல், சட்ட விரோத மாக கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி மற்றும் வழக்கறிஞர் ஆணையர் சுரேஷ் ஆகியோர் அறிக்கை அடிப்படையில், ஜனவரி 2024 முதல் மாவட்ட ஆட்சியரின் விசா ரணை நடைபெற்று வந்தது. இந்நிலை யில், கடந்த டிசம்பர் மாதம் தாது மணல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நெல்லை மாவட்ட நிர்வா கம், வி.வி. மினரல், பீச் மினரல் கம்பெனி, ட்ரான்ஸ்வேர்ல்டு நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், 60 நாட்களுக்குள் ரூ.3,528 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரி வித்தது. இந்நிலையில் அபராதத் தொகையை வசூலிக்கும் முயற்சியில் நெல்லை மாவட்ட நிர்வாகம் தீவிர மாக களம் இறங்கியுள்ளது. இதில் விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ.2,195 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.