எஸ்பிஐ (SBI) வங்கியில் 2964 காலியிடங்கள்
இந்தியப் பொதுத்துறை வங்கியில் பெரிய வங்கியான எஸ்பிஐ (STATE BANK OF INDIA) வங்கியில் காலியாக உள்ள CIRCLE BASED OFFICER பணிக்கு 2964 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுத்துறை அல்லது பொதுத்துறை கிராமிய வங்கிகளில் குறைந்தது இரண்டு வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி தரப்படும். தேர்வு முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர். எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.750/- கட்டணம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - மே 29, 2025 விண்ணப்பத்தை நிரப்பவும், கூடுதல் விபரங்களுக்கும் www.bank.sbi/web/careers என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இன்னும் 2 நாட்கள்தான்...
விண்ணப்பித்து விட்டீர்களா?. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் விஏஓ பணிகளுக்கு விண்ணப்பிப் பதற்கான கடைசித் தேதி மே 24, 2025 ஆகும். 3 ஆயிரத்து 935 பணியிடங்களை நிரப்புகிறார்கள்.
திருத்தப்பட்ட எஸ்.எஸ்.சி. (STAFF SELECTION COMMISSION) அட்டவணை
வரிசை எண் தேர்வு அறிவிக்கை தேதி விண்ணப்ப நிறைவுத் தேதி தேர்வுத் தேதி
1 சுருக்கெழுத்தர் கிரேடு சி மற்றும் டி 05.06.2025 26.06.2025 06.08.2025 முதல் 11.08.2025 வரை
2 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு
(Combined Gruaduate Level) 09.06.2025 04.07.2025 13.08.2025 முதல் 30.08.2025 வரை
3 துணை ஆய்வாளர் (Sub Inspector),
தில்லி காவல்துறை மற்றும் மத்திய காவல்துறை 16.06.2025 07.07.2025 01.09.2025 முதல் 05.09.2025 வரை
4 ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு (10+2)
(Combined Higher Secondary Level) 23.06.2025 18.07.2025 08.09.2025 முதல் 18.09.2025 வரை
5 மல்டி டாஸ்கிங் (MTS) மற்றும் ஹவில்தார் 26.06.2025 24.07.2025 20.09.2025 முதல் 24.10.2025 வரை
6 இளநிலை பொறியாளர்(சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) 30.06.2025 21.07.2025 27.10.2025 முதல் 31.10.2025 வரையில்