கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப் பாகக் கொண்டாட அமைச் சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைத்து முதல் வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஐந்து முறை தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த வர். 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவர். சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ் நாட்டின் அரசியல் தலை வராகவும் இந்திய அரசி யலின் திசையைத் தீர்மானிப் பவராகவும் திகழ்ந்தவர். நூற்றாண்டு காணும் கலைஞர் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ் நாட்டின் வருங்காலத் தலை முறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகை யில் கருணாநிதியின் நூற் றாண்டு விழா மாநிலம் முழு வதும் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப் பட்டது. கருணாநிதியின் நூற்றா ண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செய லகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதியை பெரு மைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ் நாடு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமு தாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதந்தோறும் ஒவ் வொரு பொருளின் அடிப் படையில் இந்த விழாக்களை நடத்த வேண்டும். பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக் களாக இவற்றை நடத்த வேண்டும். மேலும், அரசு நடத்து வதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல் லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் பயனடைந்த மக்கள் ஆகி யோர் இணைந்து கொண்டா டுவதாக அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2.6.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி நூற்றாண்டு லச்சினையையும் குறும் படத்தையும் முதல்வர் வெளியிட்டார்.
இதழாளர் – கலைஞர், எழுத்தாளர் – கலைஞர், கலைஞர் - கலைஞர், சமூக நீதிக் காவலர் - கலைஞர், பண்பாட்டுப் பாசறை - கலைஞர், ஏழைப் பங்கா ளர் - கலைஞர், சட்டமன்ற நாயகர் - கலைஞர்.பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் - கலைஞர்,நவீன தமிழ்நாட்டின் சிற்பி - கலைஞர்நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்,தொலை நோக்குச் சிந்தனையாளர் - கலைஞர், தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கலைஞர் ஆகிய தலைப் புகளில் அமைச்சர்கள் தலை மையில் இணைத் தலைவர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பி னர்கள் கொண்ட 12 குழுக் களை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இக்குழுக்கள் கருணா நிதியின் பன்முகத் தன்மையை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயன டைந்த மக்கள் ஆகியோரு டன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோச னைகளை வழங்கியி ருக்கிறார். இது மட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் இளை ஞர்கள் பயன்பெறும் விழாக் களாக அமைய வேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக் களை சிறப்பாக நடத்து வதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் மேற் கொள்ளும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.