1000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ திறப்பு
அறிவிப்பு சென்னை, பிப்.24 - தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் 25 விழுக்காடு வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப் படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மிகக் குறைந்த விலையில், மருந்துகள் விற்பனை செய்யும் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டத்தை தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டா லின் திங்களன்று (பிப்.24) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர், “தமி ழகத்தை கல்வியில் சிறந்த மாநில மாகவும் சிறந்த மருத்துவ கட்ட மைப்பு கொண்ட மாநிலமாகவும் உருவாக்க பல்வேறு திட்டங் களை அறிமுகப்படுத்தி வரு கிறோம். அதன் தொடர்ச்சியாக மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கக்கூடிய 1,000 மருந்தகங்கள் முதல்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது” என்றார்.
திமுக அரசின் அடையாளம் சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு அடையாளம் தான் முதல்வர் மருந்தகங்கள் திட்டம். அதிக விலைக்கு மருந்து களை மக்கள் வாங்கும் நிலை யை மாற்றவும், அவர்களின் சுமை களை குறைக்கவும்தான் மருந்த கங்களை திறக்க முடிவெடுத் தோம் என்றும் முதல்வர் தெரிவித்தார். மாவட்ட மருந்து கிடங்கு களில் இருந்து மருந்தகங் களுக்கு விரைவில் மருந்துகளை அனுப்பும் விதத்தில், 3 மாதங் களுக்கு தேவையான மருந்து கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் தீர்ந்துவிட்டால் 48 மணி நேரத்தில் மருந்தகங் களுக்கு வழங்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களில் 25 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குபவர்கள், இனிமேல் முதல்வர் மருந்தகங்களில் குறை வான விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெற முடியும். மருத்துவமனைகளை தேடி மக்கள் செல்லுவதை மாற்றி, மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் சூழலை ஏற்படுத்தி யுள்ளோம். இதில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் கே.ஆர்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மக்க ளவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டா வழங்கல், இனச்சான்று, கல்வி உரிமைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கப் போராட்டம்
பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “17 ஆண்டுகளாக அமலில் உள்ள வன உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 15,442 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் பேருக்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை” என்றார்.
கல்வி நிலை பாதிப்பு
“பழங்குடி மாணவர்களுக்கான 400க்கும் மேற்பட்ட விடுதிகளில் 28 ஆயிரத்துக் கும் அதிகமானோர் தங்கியுள்ளனர். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட விடுதி களில் காவலாளியேஇல்லை. பாலியல் வன்முறை அச்சுறுத்தல் காரணமாக பெற் றோர்கள் குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்துகின்றனர். விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. எஸ்சி, எஸ்டி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் அலட்சியம்
“வன உரிமைச் சட்டத்தை அமலாக்கு வதற்காக தலைமைச் செயலாளர் தலைமை யில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. பழங்குடி சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றத்தின் உத்தர வின் பேரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 104-ஐ அமல்படுத்த மாட்டோம் என பல கோட் டாட்சியர்கள் அரசுக்கு சவால் விடு கின்றனர்” என்றார்.
கோரிக்கைகள்
சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு பேசுகையில், “பழங்குடி பெண்களின் நுண்கடன்களை ரத்து செய்ய வேண்டும். 86 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில் சமவெளிப் பகுதியில் உள்ள பழங்குடிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்”என்றார். போராட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.சரவணன், பொருளாளர் ஆ.பொன்னுசாமி, துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் ஈ.கெங்காதுரை, குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பி.வீரபத்திரன், காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் ஏ.அய்யனார், ஆத்தூர் மலைக்குறவன் மக்கள் சங்கத்தின் ஆர்.தனபால் உள்ளிட் டோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரை ஆற்றினார்.