tamilnadu

img

அண்ணாமலை மிரட்டல் : அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி

மதுரை, செப். 17- ‘10 ஆண்டுகள் காவல்துறையில் துப்பாக்கி புடிச்ச கை இது’ என அதிமுக வினருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பாஜக அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே தொடர்ந்து பல மாத காலமாக மோதல்  நீடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்ற வாளி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு ஜெய லலிதாவை விமர்சிப்பதா என அதிமுக  தலைவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு  அண்ணாமலையை தாக்கிபேசினார் கள். தொடர்ந்து அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமியை, ‘முதிர்ச்சி இல்லாதவர்’ என்று அண்ணா மலை சொல்லும் அளவுக்கு அந்த விவகாரம் சென்றது.

இதனால் அதிமுக - பாஜக கூட்டணி  உடையும் நிலை ஏற்பட்டு, பின்னர் தில்லி தலையீட்டால் அது ‘சரிசெய்யப்பட் டது’. இந்த சூழலில், மீண்டும் அதிமுக வை வம்புக்கு இழுத்திருக்கிறார் அண்ணாமலை. இந்த முறை, மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவை அவர்  விமர்சித்துள்ளார். ‘மதுரையில் முத்து ராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடி  வந்தவர் தான் அண்ணாதுரை’ என்று  கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு அதிமுகவினர் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இது தொடர்பாக சனியன்று பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  “அண்ணாதுரையைப் பற்றி யார் பேசி னாலும் அவனது நாக்கு துண்டாக்கப் படும்” என பகிரங்கமாக எச்சரித்தார். அதேபோல, விழுப்புரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அண்ணாமலை இத்துடன் அதிமுக தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என எச்சரித்தார்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக  அண்ணாமலை, சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்ததே வசூல் செய்வ தற்குத் தான் என்று அனைவருக்கும் தெரி யும். கீழ்த்தரமாக பேசுபவர்களுடன் சரிக்குச் சமமாக பேசி எனது தரத்தை  தாழ்த்திக்கொள்ள நான் விரும்ப வில்லை. தமிழ்நாட்டில் பாஜக அடைந் திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்கள். 10  ஆண்டுகள் காவல்துறையில் துப்பாக்கி  புடிச்ச கை இது. யாருக்கும் அடிமை யாக இருந்து எனக்கு பழக்கம் கிடை யாது. அதனால் என்னிடம் பார்த்து பேசுங்க. நேர்மையைப் பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். சி.வி.  சண்முகம் அமைச்சராக இருந்த போது  என்னென்ன செய்தார் என்று எனக்கு தெரியும். அதைப் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை” என மிரட்டல் விடும் நோக்கில் பேசினார். இது அதிமுக தொண்டர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற அதிமுக தொண்டர்களின் புலம்பலும் அதிகரித்துள்ளது.