tamilnadu

img

தனியாருக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் கி.மீ. மாநில நெடுஞ்சாலை

சென்னை, ஆக. 19 - மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைத்து, சுமார் 10 ஆயி ரம் கி.மீ. சாலையை தனியா ருக்கு கொடுக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்த திட்ட த்தைக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தி னர் போராட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு, தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தை அமைத்து, தேசிய நெடுஞ்சாலைகளை தனி யாருக்கு கொடுத்து, சுங்கக் கட்ட ணம் வசூலிக்கிறது. அதேபோன்று தமிழ்நாடு அரசும் மாநில நெடுஞ் சாலை ஆணையத்தை அமைக்க உள்ளது. 10 ஆயிரத்து 200 கிலோ  மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலை யை தனியாருக்கு கொடுக்க உள் ளது. இதன்மூலம் மாநில நெடுஞ் சாலைகளிலும் 50 கிலோ  மீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி (டோல்கேட்) அமைக்கும் திட்டம் உள்ளது என்று  கூறி சாலைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைக்கும் முடிவை கைவிட  வலியுறுத்தி திங்களன்று (ஆக.19) சென்னையில் உள்ள நெடுஞ்சா லைத் துறை தலைமை பொறியா ளர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தினர். அப்போது தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியா ளர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஆ. அம்சராஜ் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 18 கோடி ரூபாய்க்கு மாறாக 250 கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செல விட்டு முறைகேடு செய்ததாக முதலமைச்சர் கூறினார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போலவே மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படும் என்று அமைச்சர் கூறுகிறார். இதன் பொருள் என்ன?

மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைத்தால் 3500 சாலை  பணியாளர்கள் வெளியேற்றப் படுவார்கள். சமூக நீதியும், கிராமப் புற இளைஞர்களுக்கு வேலை யும் பறிபோகும். ஆயிரக்கணக் கான கோடி ரூபாய்களை அரசிடம் பெற்றுக் கொண்டு, முதலாளிகள் சுங்கச்சாவடி அமைத்து கொள்ளையடிப்பார்கள். அதாவது 100 கிலோ மீட்டர் நீள சாலையில் 2 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படும். மொத்தத்தில் 200 சுங்கச்சாவடிகள் அமைக்கப் படும். ஒரே வட்டம் வழியாக (தாலுகா) 3 - 4 மாநில நெடுஞ் சாலைகள் செல்லும். இதனால் மக்கள் திரும்பிய பக்கமெல்லாம் கட்டணம் செலுத்த நேரும். என வே, ஆணையம் அமைப்பதை கை விட்டு, மாநில நெடுஞ்சாலைகளை அரசே பராமரிக்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஆபத்துப்படி, பய ணப்படி போன்றவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி னோம்” என்றார். சங்கத்தின் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத் தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மாநிலத் தலைவர் (பொறுப்பு) சா. டேனி யல் ஜெயசிங், சங்கத்தின் பொரு ளாளர் இரா.தமிழ் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை தொடர்ந்து தலைமை செயலகத்தில் முத லமைச்சர் அலுவலகம், துறைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் மனு அளிப்பட்டது.