ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு கட்டிட உள் வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும் அவரது தாய் குமுத் நாயக்கும் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்துகொண்ட அன்வய் நாயக் மற்றும் குமுத் நாயக் இருவரும், அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவரது பெயரையும் தங்களின் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டு, தங்களுக்கு அளிக்கவேண்டிய 5.40 கோடி ரூபாயை அவர்கள் தராத காரணத்தால் நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தனர் .
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டிதாக அர்னாப் கோஸ்வாமி மீது ஏற்கனவே புகார் இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் ரிபப்ளிக் சேனலிலிருந்து நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்யவில்லை. அதனால் தான் தனது தந்தை மற்றும் பாட்டி தற்கொலை செய்துகொண்டதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக்கிடம் புகார் அளித்தார். இதையடுத்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை அலிபாக் காவல்துறையினர் அர்னாப்பை அவரது வீட்டிலிருந்து கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.