மும்பை:
மகாராஷ்டிர மாநில தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மும்பையில் பெஸ்ட் பேருந்துப் பயணத்திற்கான கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி 8 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம், தற்போது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 20 இருந்தால், தானே, நவிமும்பை பகுதிகளுக்கு செல்லமுடியும். இதேபோல வெறும் 6 ரூபாய் இருந்தால் ஏ.சி. பேருந்தில் 5 கி.மீ.க்கு பயணம் செய்யலாம்.