tamilnadu

img

மகாராஷ்டிரா: சாலை விபத்தில் சிக்கிய 26 பேர் பலி

மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் செவ்வாயன்று காலை அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த கிணற்றில் பேருந்தும் ஆட்டோவும் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;