tamilnadu

img

ஊராட்சித் தலைவர் அதிகார துஷ்பிரயோகம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஜூலை 18- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சி தலைவர் மற் றும் அவரது கணவர் ஆகியோர் அதிகா ரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், சிங்காரவேலன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி.கணேசன், சி. மேகநாதன், வட்டக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், செல்வநாதன், வைரவன், ராம குரு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆலங்குடி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்காலை ஊராட்சி தலைவர் என்ற அதிகாரத்தில் மூடி பல லட்சம் மதிப்புள்ள மரங்களை அரசு அனு மதி இல்லாமல் வெட்டி விற்பனை செய் துள்ளார். மேலும் புதிதாக வாய்க்காலை அமைத்து நூற்றுக்கணக்கான டிப்பருக்கும் மேல் மணலை தோண்டி விற்பனை செய்த தோடு, அந்த இடத்தையும் அபகரிக்க முயற் சித்து வருகிறார். இது குறித்து கேட்ட பாதிக்கப்பட்ட தனபதியையும் அவரது குடும்பத்தினரை யும் கூலிப்படை வைத்து கொலை செய்ய வும் முயன்று வந்த நிலையில் குத்தாலம் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லா ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை அறிந்த கோட்டாட்சியர் மகாராணி, சிபிஎம் தலை வர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உட னடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.

;