tamilnadu

img

மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்: சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், பிப். 5- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டானது மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பட்ஜெட்டாக அமைந் துள்ளது. இது பொருளாதாரத் தில் தொடர்ச்சியான மந்த நிலை, வேலையின்மை அபா யத்தை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. மேலும், மக்களின் வருமா னத்தை பெருக்குவது, விலை வாசி உயர்வு, மக்கள் துய ரங்கள் அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் பற்றி கவலைப் படாமல் பட்ஜெட் உள்ளது. 

இதேபோல்,  கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், ஊழி யர்களுக்கு குறைந்தபட்ச ஊதி யம், சமூக பாதுகாப்பு மற்றும் கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை உத்தரவாதப்படுத்த பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் செய்யாததை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்டத்தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்ட துணைச் செயலாளர் ஏ. கோவிந்தன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன்  உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.

;