விழுப்புரம்.டிச.9- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது பாக்கம் கிராமம். இங்கு அரசினர் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பாக்கம், கோண்டூர், துலுக்க நத்தம், ரெட்டி பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி. இவர் தலித் மாணவர்களை அங்கு உள்ள கழிப்பறை, மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை சுத்தம் செய்ய சொல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய சொல்லி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரசு வழங்கும் விளையாட்டு தொடர்பான நிதியை முறையாக செலவு செய்வது இல்லை. பள்ளியின் அடிப்படை தேவை மற்றும் செலுவுகளுக்கு மாணவர்க ளிடம் வசூல் செய்கிறார். வெளியூரில் இருந்து பள்ளிக்கு வரும் தலித் மாணவிகளை அப் பகுதியில் உள்ள ஆதிக்க இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் பலமுறை இரு தரப்பினருக்கும் சிறு, சிறு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பெரிய அள வில் இரு தரப்பு மோதல் ஏற்படும் முன்பு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி ஆதிதிராவிடர் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் இளை ஞர்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரி யரை மாற்றவேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தவிட்டு வந்த பின்பு தெரிவித்தனர்.