tamilnadu

img

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் : இறுதி போட்டியில் பி.வி.சிந்து

பாசெல், 
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில்,   இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பேவை எதிர்கொண்டார். 

40 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பி.வி. சிந்து 21-7, 21-14 என்ற செட் கணக்கில் சென் யூ பேவை வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 
 

;