tamilnadu

img

பாஜகவில் சாய்னா நேவால்

இந்திய பேட்மிண்டன் துறையின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் (ஹரியானா) ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் தவிர்த்து மற்ற உலக டூர் தொடர்களில் அதிக முறை பட்டம், பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.  பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பை திருமணம் செய்துள்ள சாய்னா தனது சகோதரியுடன் பாஜக தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் (தலைநகர் தில்லியில்) பாஜகவில் இணைந்தார். விளையாட்டு துறையில் ஜாம்பவான்களான கவுதம் கம்பீர் (கிரிக்கெட்), பபிதா போகத் (மல்யுத்தம்) ஆகியோர் பாஜகவில் இணைந்த பின்பு சாதாரண நெட்டிசன்கள் கூட அவர்களை மதிக்காமல் மீம்ஸ் மூலம் வறுத்தெடுத்தனர். புரியும் படி சொன்னால் பாஜகவில் இணைந்த பின்பு தங்களது மதிப்பு, சாதனைகளை இழந்தாற் போல டம்மியாகிவிட்டார்கள்.  இதே வரிசையில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளை வென்ற சாய்னா தற்போது பாஜக வலையில் சிக்கியுள்ளார். மதிப்பு, மரியாதையை தொடர்ந்து கையில் வைப்பாரா? இல்லை நெட்டிசன்களிடம் சிக்கி டம்மியாகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

;