tamilnadu

img

நூறு நாள் வேலையில் சட்ட விரோத எந்திர பயன்பாட்டினால் பெண் பலி... சம்பவத்தை மறைக்க அதிகாரிகள் முயற்சி: சிபிஎம் கண்டனம்

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாதிம்மூர் கிராமத்தில் 16.9.2020 அன்று ஊரகவேலை திட்டத்தில் பணிபுரிந்த ஜெயலட்சுமி க.பெ சீனிவாசன் என்பவர் சட்ட விரோத எந்திர பயன்பாட்டினால் டிராக்டர் மோதி பலியானார். இந்நிலையில் 22.9.2020 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் ஆறுதல் தெரிவித்தனர். 

பின்னர் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக்குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை மறைக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் எந்திரங்கள் பயன்படுத்துக் கூடாது என்று தெரிந்தே சட்டவிரோதமாக இயந்திரங்களை பயன்படுத்தியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. எனவே இதற்கு காரணமான வட்டாரவளர்ச்சி அலுவலர் பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி துணை செயலாளர் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களை பணியிடை நீக்கம்செய்யாமல் பணிநீக்கம் செய்ய வேண்டும். ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு 20 வட்சம் இழப்பீடு வழங்கி அவரது கணவர் சீனிவாசனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தாயை இழந்து தவிக்கும் இரண்டுகுழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் ஜெயலட்சுமியின் மரணத்திற்கு நீதிக் கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செப்டம்பர் 26 அன்றுமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாசர் தலைமையில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து ஜனநாயக இயக்கங்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு துரைசாமி, ஒன்றிய செயலாளர் துரை அருணன் விதொசமாவட்ட செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.

;