tamilnadu

பெரம்பலூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

சிறுவாச்சூர் - மருதடி சாலையை சீரமைத்திடுக!

பெரம்பலூர், அக்.3- பெரம்பலூர் அருகே சேதமடைந்த சாலை யால் அதிக விபத்துகளை ஏற்படுத்தி வரும்  சிறுவாச்சூர்- மருதடி தார்ச்சாலையை உடன டியாக செப்பனிட வேண்டுமென அக்கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் புதனன்று நடைபெற்றது. இதில் பெரம்ப லூர் ஒன்றியம், சிறுவாச்சூரில் ஊராட்சி செய லாளர் காமராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. பொதுமக்கள் அனைவரும் தங்கள்  இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு களை ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் உறிஞ்சு குழி அமைப்புகளை அதிகளவில் அமைப்பது, நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்திடும் நோக்கில் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்தல், அனைத்து தரப்பு மக்களும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கைப்பைகளை உபயோகித்தல், மத்திய, மாநில அரசுகளும் நீர் சேகரிப்பின் அவசி யத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் ஜல்சக்தி அபியான் போன்ற திட்ட ங்களை மக்கள் இயக்கமாக செயல்ப டுத்துதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன.  சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையால் அதிக விபத்துகளை ஏற்பட்டு வருவதை தடுக்கும் வகையில் சிறுவாச்சூர்  - மருதடி தார்ச்சாலையை உடனடியாக செப்ப னிடவேண்டும் உட்பட பல்வேறு கோரி க்கைகளை நிறைவேற்ற பொதுமக்கள் வலியு றுத்தினர்.

ரத்த தான முகாம்

நன்னிலம், அக்.3- நன்னிலம் வட்டக்கிளை இந்தியன் ரெட்கிராஸ் சொ சைட்டி சார்பில் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 150-வது காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இந்திய உண வுக்கழக தடகள விளை யாட்டு வீரர் என்.ஆர்.சுப்ரம ணியம் தலைமை வகித்தார். நன்னிலம் வட்டக்கிளை இந்தி யன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் உத்தமன் முகாமை தொடங்கி வைத்தார்.