பெரம்பலூர், நவ.16- 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.14 அன்று தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வியாழக்கிழமை பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொடியேற்றி துவக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழ மையன்று பெரம்பலூர் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இரத்த தான முகாமினை மண்டல இணைப் பதிவாளர் த.செல்வக் குமரன் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சத்யா துவக்கி வைத்தனர். இதில் 42 நபர் குருதிக் கொடை வழங்கி னார்கள். தொடர்ந்து செட்டிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் சரக துணைப் பதி வாளர் த.பாண்டித்துரை தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். சங்க தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் கள் மணிமேகலை, செல்வராஜ், ராஜேஸ்வரன் உள்பட சங்க பணி யாளர்கள், விற்பனையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் 18-ல் பெரம்பலூர் எளம்பலூர் சாலையிலுள்ள கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள் கின்றனர்.