பெங்களூரூ:
`ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுதமுடியாமல் போன கர்நாடக மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்’ என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். இதனால், நீட் தேர்வைத் தவறவிட்ட கர்நாடக மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நன்றி தெரிவித்திருக்கிறார்.