புதுச்சேரி, ஏப்.21 - ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் குறித்த முடிவினை மாநில அரசுகளே மேற்கொள்ள லாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறி யிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி புது வையில் உணவகங்கள் செயல்பட துவங்கி யுள்ளன. பார்சல்களுக்கு மட்டுமே அனு மதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியன் காஃபி ஹவுஸ் அனைத்து கிளைகளும் திறக்கப்பட்டுள்ளது. உணவுகள் முறை யாக தயார் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முகக் கவசம் அணிந்திருப்ப வர்களுக்கு மட்டுமே உணாவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் உள்ள ஏழை மக்கள் பசியால் வாடக் கூடாது என்ற பொது நோக்கில் நடமாடும் உணவகங்கள் திறக்கப் பட்டுள்ளது. அன்ன பிரதோஷன சேரிட்டபிள் ட்ரஸ்ட் என்று அழைக்கப்படும் அந்த உணவகம் ரூ. 10-க்கு நான்கு சப்பாத்தி களை ஏழைகளுக்கு விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.