tamilnadu

img

தொழிலாளர்களை அனுப்பிவைக்கச் சம்மதம்... எதிர்ப்பால் பின்வாங்கிய முதல்வர் எடியூரப்பா!

பெங்களூரு:
பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கிளம்பவிருந்த நிலையில், எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு, அந்தசிறப்பு ரயில்களை திடீரென ரத்து செய்தது.

“குறைந்த கூலிக்கு நாங்கள் பணியமர்த்தி இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களை, சொந்த ஊருக்கு அனுப்பி விட்டால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்” என்று கர்நாடக மாநில ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவன முதலாளிகள் கூறியிருந்தனர். இதுதொடர்பாக முதல்வர் எடியூரப்பாவை நேரிலும் சந்தித்தனர்.இந்த பின்னணியிலேயே சிறப்பு ரயில் களை முதல்வர் எடியூரப்பா ரத்து செய்தார்.

இது, புலம்பெயர் தொழிலாளர்களை விரக்திக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. அவர்களில் பலர் நடைப்பயணமாகவே, சொந்த ஊர்களுக்குச் செல்வதென்று முடிவெடுத்து விட்டனர்.அவ்வாறு அவர்கள் கூட்டம் கூட்டமாகநடந்து செல்லும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொத்தடிமைத்தனத்தை கொண்டுவர எடியூரப்பா முயற்சிக்கிறாரா? என்று எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.இதையடுத்து, எடியூரப்பா தனதுமுடிவிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளார். ஜார்க்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், பீகார், மணிப்பூர், திரிபுரா, மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த மாநில அரசுகள் அனுமதி அளித்ததும் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

;