tamilnadu

img

தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒடிசா மாநிலம் ஏற்காது... முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி

புவனேஸ்வர்:
தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC), ஒடிசா மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வரும், பிஜூ ஜனதாதளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், இஸ்லாமியப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவளித்த நிலையில், அம்மாநிலத்திலுள்ள பாலசோர், பாத்ரக், ஜாஜ்பூர் மாவட்ட இஸ்லாமியப் பிரதிநிதிகள், பட் நாயக்கை நேரில் சந்தித்து, தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு தொடரபான தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர், முதல்வரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த முஸ்லிம் பிரதிநிதிகளின் தலைவர் அப்துல் பாரி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்’ என்று முதல்வர் நவீன் பட்நாயக் தங்களிடம் தெரிவித்ததாகவும், அத்துடன் ‘தேசிய குடியுரிமைப் பதிவேடு மாநிலத்தில் அமல்படுத்தப் படமாட்டாது’ என்று தங்களுக்கு நவீன்பட்நாயக் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

;