tamilnadu

img

பாபர் மசூதி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு!

புவனேஸ்வர்:
பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது? என்ற வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு அமையும் என ஆர்எஸ்எஸ் ஆரூடம் கூறியுள்ளது.ஆர்எஸ்எஸ்-ஸின்அனைத்திந்திய நிர்வாகக் குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந் தது. இக்கூட்டத்திற்குப் பின்,ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி, வெள்ளிக்கிழமையன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேற்கண்ட ஆரூடத்தை அவர் தெரிவித்தார்.“அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணையை முடித்து விட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்துத் தடைகளும் போக வேண்டும் என்பது எங்களின் நீண்டகால நிலைப் பாடு. நிலம் யாருக்குச் சொந் தமானது? என்பது குறித்த சட்டப்பூர்வ பிரச்சனை இருந்தது. தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள் ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்துசமுதாயத்திற்கு சாதகமாகவே அமையும் என்றுஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புஅனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.”இவ்வாறு பையாஜி ஜோஷி கூறியுள்ளார்.தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நாடு முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும்; இந்திய தேசியத்தின் அடிப்படையில் குடிமக்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும்பையாஜி ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

;