tamilnadu

img

ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா ரூ. 1000 கோடி கொடுத்தார்!

மாண்டியா:
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) எம்எல்ஏ-க்கள் 15 பேரையும் பாஜக தலைவர் அமித்ஷாவே நேரடியாக களத்தில் இறங்கி, அவர்களை குமாரசாமி அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக எடியூரப்பா பேசியிருந்தார்.இந்த பேச்சு அடங்கிய ஆடியோ ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் ஓயவில்லை.

இந்நிலையில், குமாரசாமி அரசைக் கவிழ்ப்பதற்காக எடியூரப்பா தனக்கு ரூ. 1000 கோடி பணம் கொடுத்தார் என்று தகுதி நீக்க எம்எல்ஏ-வான நாராயண கவுடா வாக்குமூலம் அளித்திருப்பது, பாஜகவுக்கு புதிய இடியாக மாறியுள்ளது.“யாரோ ஒருவர் என்னிடம் வந்து அதிகாலை 5 மணிக்கு பி.எஸ். எடியூரப்பாவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தபோது, எடியூரப்பா வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார். நான் நுழைந்ததும், அவர் என்னை உட்காரச் சொன்னார், அவர்மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு நான்அவரை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.நான் கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு ரூ. 700 கோடி ஒதுக்குமாறு அவரிடம் கேட்டேன். அவரோ, ரூ. 700 கோடி என்ன, ஆயிரம் கோடி ரூபாய் தருகிறேன் என்று கூறினார். சொன்னபடியே அந்த பணத்தையும் வழங்கினார். அதனடிப்படையிலேயே, எடியூரப்பாவை ஆதரிப்பதற்கு நான் முடிவு செய்தேன்” என்று நாராயண கவுடா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேலும், “தனக்கு மட்டுமல்லாது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ -க்களுக்கும், மாண்டியாவில் வைத்து தொகுதி மேம்பாட்டிற்காகப் பணம் வழங்கப்பட்டது” என்று கூறியுள்ள நாராயண கவுடா, “தற்போது தகுதி நீக்க எம்எல்ஏ-க்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று எடியூரப்பா கூறுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.

;